Menu
Your Cart

தமிழரைத் தேடி: இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே

தமிழரைத் தேடி:  இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே
-5 % Out Of Stock
தமிழரைத் தேடி: இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே
த.தங்கவேல் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மீண்டும் ஆரியரைத் தேடி…” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி…”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது. தமிழர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி பகுதியிலிருந்து நேரடியாக கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளனர். இதன் மூலம் தமிழரின் மரபணுக்கள் தமிழக நாட்டு நாய், தமிழ்ச் சொற்கள் தமிழரின் வளைதடி ஆகியவை ஆஸ்திரேலியாவை அடைந்ததை இந்நூல் தெளிவாக நிறுவுகிறது. முதல் நூல் ஆரியரின் மூலத்தை தேடியவர், இதில் தமிழரின் ஆதி மூலத்தை தேடுகிறார். மிக முக்கியமாக இந்நூல் தொல்லியல், மொழியியல், மானுடவியல், மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரின் வரலாறுகள் யூகங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட சுழலில் உண்மையான அறிவியல் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். தமிழரின் தோற்றுவாய் எங்கே ஆரம்பிக்கப்பட்டது?? தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழியா? ஆரியருக்கும் தமிழருக்கும் உள்ள மரபணு வேற்றுமையில் ஒற்றுமை, சடங்குகளின் வரலாறு, மொழியில் பின்புலத்தில் ஆராய்ச்சி, இலக்கியச் சான்று, கருப்பு சிவப்பு பண்பாடு, பெருங்கற்கால பண்பாட்டு போர்க்குடிகள், இரும்பைதேடிய வணிக குழுக்கள், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் வாணிகம், மினோயன் நாகரிகத்தின் தொடர்புகள், ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளுக்கு பின் உள்ள வரலாறுகள் என பத்தாயிரம் வருட வரலாற்றை தரவுகளுடன் நூல் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்திற்குரிய காரணக் கண்ணி இப்புத்தகத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டின் மூலமே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது என்று அழுத்தமாக பல தகவல்களிம் மூலம் சொல்லுகிறார்.
Book Details
Book Title தமிழரைத் தேடி: இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே (Thamizharai thedi)
Author த.தங்கவேல்
Publisher சமூக இயங்கியல் ஆய்வு மையம் (Samooga Iyangaviyal Aaivu Mayyam)
Pages 326
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல கட்டங்களில் இந்தியாவிற்குள் குடியேறிய, மத்தியதரைக் கடலோர வணிகக் குழுக்கள் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மைப் பங்களிப்பு செய்தனர் என்ற வரலாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அரசியல் நெருக்கடி காரணத்தினால் தங்கள் அரசுகளை இழந்த மூதாதை சுமேரியர்..
₹304 ₹320