
-5 %
குறியியல் - ஓர் அறிமுகம்
₹523
₹550
- Edition: 1
- Year: 2024
- ISBN: 978 81 7720 342 4
- Page: 472
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிப்பது மொழி. மொழிக்கு முந்தைய நிலையில் சமிக்ஞையே மொழியாக இருந்தது. பிற்காலத்தில் வாய்மொழி, எழுத்து மொழி எனப் பரிணாமம் அடைந்தது. இந்த மொழிகள் பிறருக்குத் தகவல்களை வழங்குகின்ற ஊடகங்களாகச் செயல்படுகின்றன.
குறியியல் என்பது ஏதோ ஒன்றை ‘குறிப்பதற்காக வரும்’ எல்லாவற்றைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு குறித்தும் விளக்கும் மொழி அறிவியல். சொற்கள், பிம்பங்கள், ஒலிகள், பாவனைகள், சின்னங்கள் எனப் பல்வேறு வடிவங்களைக் குறிகள் எடுக்கின்றன; ஒளியாக, புலனுணர்வாக, குறியீடாக அர்த்தம் தரும் எல்லாமே குறிகள் எனப்படுகின்றன. ஒரு குறியிலிருந்து அர்த்தம் கடத்தப்படுவதைக்கொண்டு குறிகளின் வகைமைகள் உருவாகின்றன.
எடுத்துக்காட்டாக, பச்சை என்பது சொல்லாகவும், நிறமாகவும், விளக்காகவும் பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறது. அது மற்றொரு நிறத்துடனும், சொல்லுடனும், விளக்குடனும் வேறுபடுவதை வைத்து, ஏராளமான அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
செமியாலஜி என சசூரும் செமியாட்டிக்ஸ் என பர்ஸும் விளக்கிய குறியியலை முன்வைத்து, டேனியல் சாண்ட்லர் இந்த அறிமுக நூலை எழுதியிருக்கிறார். இதில் பதினாறு இயல்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கியம், திரைப்படம், விளம்பரம் போன்றவற்றில் குறியின் மூலம் உருவாகும் ஏராளமான அர்த்தங்களை நூலாசிரியர் புதிய அனுபவம்
தரும் வகையில் விளக்குகிறார்.
இந்த நூல், வாசகர்களுக்குக் குறிகள் தரும் அர்த்தங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் கிளர்த்தும். மொழியியல், சமூகவியல், மானிடவியல் ஆய்வுகளுக்கும் இலக்கியப் புரிதல்களுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
தமிழில் முதன்முறையாக, குறியியல் என்னும் தனித் துறையை விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல். இதை முபீன் சாதிகா எளிய நடையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்.
Book Details | |
Book Title | குறியியல் - ஓர் அறிமுகம் (Kuriyiyal) |
Author | டேனியல் சாண்ட்லர் |
Translator | முபீன் சாதிகா |
ISBN | 978 81 7720 342 4 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 472 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2024 New Releases |