-5 %
இறகிசைப் பிரவாகம் - 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள்
இரா.கவியரசு (தொகுப்பாசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196838133
- Page: 190
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும் வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்தாலும் இருதயமெல்லாம் திகைக்கத் தொடங்கிவிடுகிறது அவர்களுக்கு.
பறக்க விழையும் ஆன்மாவின் சாயலாகவே ஒவ்வொரு பறவையையும் காண்கிறார்கள். அவர்கள் பாடும் கவிதைகளை அவை பொருட்படுத்துவதேயில்லை. எனினும் வலுக்கட்டாயமாக அவற்றின் சிறகுகளுக்கு வலிக்கா வண்ணம் கவிதையைக் கட்டி முடிச்சிடுகிறார்கள். ஒருமுறை பறவையுடன் இணைந்து விட்ட கவிதை சதாகாலங்களிலும், வாசிக்கும் தோறும் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் பறவையும் கவிதையும் நித்தியமாகி விடுகின்றன. பறவைகளையும், கவிதைகளையும் ஒன்றாகப் பறக்க விடும் வானத்தின் திருவிழாவே இந்த இறகிசைப் பிரவாகம்.
Book Details | |
Book Title | இறகிசைப் பிரவாகம் - 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள் (iragisai piravagam) |
Compiler | இரா.கவியரசு |
ISBN | 9788196838133 |
Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
Pages | 190 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2024 New Releases |