Menu
Your Cart

மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)

மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
இரா.கவியரசு (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையானவை என்ற போதிலும், அலைகளில் தாக்குண்டு சிதறும் பொருட்களின் தன்மையைப் பொருத்து கல்லின் ஆழமும் வீச்சின் வேகமும் உணரப்படும். கல் ஒரு முறைதான் வீசப்படுவது போல கவிதை வெளிப்படுகிறது. ஆனாலும் வாசிக்கும் தோறும் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கிறது. வெவ்வேறு கவிதைகளின் தோற்றுவாயாக மாறுகிறுது.நல்ல கவிதை வாசிப்பவனுக்குள் நுழைந்து ஆழத்தில் உறைந்திருக்கும் வாழ்வை அகழ்ந்தெடுத்து வந்து தரிசனப்படுத்தி திகைக்க வைக்கிறது. அதனால்தான் இது என்னுடைய வாழ்வல்லவா என கொண்டாடுகிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை என்பதால் பொதுவான அனுபவமளிப்பதிலிருந்து கவிதைகள் மேலே செல்கின்றன. ஒவ்வொரு கண்ணாடியும் தனக்கான பிம்பங்களையே அகத்தில் உருவாக்கிக் கொள்கின்றன. வாசித்த கவிதைகள் உருவாக்கிய தாக்கத்தை வாழ்வின் அனுபவங்களுடன் சொல்லிப்பார்க்க முயன்றதின் விளைவே  இக்கட்டுரைகள்.
Book Details
Book Title மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்) (Maya sannatham)
Author இரா.கவியரசு
ISBN 9788195506415
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 198
Published On Dec 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha