-5 %
Out Of Stock
பறவைகள் உலகம்
₹109
₹115
- Edition: 1
- ISBN: 9788123741468
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடையாளங்களையும் குணாதிசியங்களையும் படிக்கும் போது மெட்டலர்ஜி பாடம் தான் நினைவுக்கு வருகின்றது.அப்போது படிக்கும் போது எல்லாமே புரியும், ஆனால் ஒரு செமஸ்டர் முழுக்க உட்கார்ந்து படித்தாலும், கடைசியில் எதுவும் மனதில் நிற்காது. வெங்கலத்திலும் பித்தளையிலும் என்னென்ன தனிமங்கள் என்னென்ன அளவுகளில் இருக்கும் என்பது கூட மனதில் நிற்காது. அது மாதிரி தான் இதுவும். புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர். எம்.வி.ராஜேந்திரன். ஆங்கில மூலத்தில் பறவைகள் வரும் இடங்களாக, பம்பாய் போன்ற இடங்களைச் சுட்டியிருந்தால், இவர் இங்கே அதற்கு இணையான வேடந்தாங்கல், திருநெல்வேலி போன்ற இடங்களைச் சுட்டுகிறார். ஆழமான மொழிபெயர்ப்பு.
பறவைகளை இனங்கண்டுபிடிப்பது சாதாரண விஷயமேயில்லை. நீர்க்காக்காய் என்று அழைக்கப்படும் ஒரு பறவையைப் பலமுறை பார்த்திருந்த போதும், அது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், முக்குளிப்பான், கூழைக்கடா, நீர்க்காகம் என்பவற்றுள் எது என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றுடைய குணாதிசயங்களும் உருவமும் அதிக வித்தியாசமில்லாதவை. அனுபவம், பயிற்சி முக்கியமாக வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே ஒரு பறவையைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும்.
Book Details | |
Book Title | பறவைகள் உலகம் (paravaigal-ulagam) |
Author | சாலிம் அலி, சலீம் அலி |
Translator | எம்.பி.ராஜேந்திரன் |
ISBN | 9788123741468 |
Publisher | National Book Trust (National Book Trust) |
Pages | 128 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் |