Menu
Your Cart

கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்)

கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்)
-5 %
கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புகழ்பெற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஷிப்லி நுமானி, இஸ்லாமிய இலக்கியத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கும் ‘அல்-ஃபாரூக்’ என்று நன்கறியப்படும் இந்த ஆக்கத்தில், இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது கலீஃபாவான உமரின் வரலாற்றைக் கூறுகிறார். இஸ்லாமியப் பேரரசை (பொஆ 634-44) வடிவமைத்த சிற்பியாகக் கருதப்படும் உமர், பல நூற்றாண்டுகளாக வளர்ந்துவரும் பேரரசை ஒன்றாக வைத்திருக்கக்கூடிய, ஒரு முன்மாதிரி அரசியல் கட்டமைப்பை நிறுவினார். நூஃமானி இந்த நூலில், வரலாற்றில் ஒரு மாபெரும் வெற்றியாளராகவும் அரசியல் மேதையாகவும் திகழ்ந்த உமரின் புகழை ஆராய்கிறார். அதேவேளை அவருக்கு அல்-பாரூக் (சரியானதையும் பிழையானதையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்) என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்த அவருடைய கடமையுணர்வையும் நேர்மைத் தன்மையையும் அவர் பரிசீலிக்கிறார். * உமரின் தலைமையிலான இஸ்லாமிய அரசு, பாரசீகப் பேரரசு முழுவதையும் கிழக்கு ரோமானியப் பேரரசின் மூன்றில் இரண்டு பங்கையும் ஆளும் ஒரு முன்னோடியில்லாத விகிதத்தில் விரிவடைந்தது. உமர் ஒரு தலைவராக, தனது எளிமையான, சிக்கனமான வாழ்க்கை முறைக்காக நன்கறியப்பட்டார். அக்கால ஆட்சியாளர்களைப் போல ஆடம்பரமாகவும் பகட்டாகவும் உமர் வாழ்க்கை நடத்தவில்லை. மாறாக, முஸ்லிம்கள் ஏழைகளாகவும் துன்புறுத்தப்பட்டவர்களாகவும் இருந்தபோது அவர்கள் வாழ்ந்ததைப் போலவே வாழ்ந்துவந்தார். * இந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி உமரின் வாழ்க்கையும் அரசியல் சாதனைகளையும் விவரிக்கிறது. இரண்டாவது பகுதி அவருடைய ஆட்சிமுறைகள், அரசியல், சமயச் செயல்பாடுகள், புலமைத்துவச் சாதனைகள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், நற்பண்புகள் ஆகியவை குறித்து விரிவாக அலசுகிறது. நூஃமானி உலகிலுள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கும் இடங்களுக்கும் சென்று விரிவான ஆய்வுடன் இந்த நூலை எழுதியிருப்பதால், உமரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகவும் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது.
Book Details
Book Title கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்) (Kalifa Umar Ravi)
Author ஷிப்லி நுஃமானி
Translator கே.ஜே.மஸ்தான் அலீ பாகவி
ISBN 978 93 82194 13 2
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 720
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author