-5 %
ஐ பாம்பு
விஸ்வா நாகலட்சமி (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாம்புகளை குறித்து முழுமையான தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இந்தியா போன்ற வெப்பமண்டலப்பகுதியில் எண்ணற்ற வகையான பாம்பினங்கள் பரிணமித்து நிலத்தில் மலைகளிலும் சமவெளிகளில் நீரில் கடலிலும் நன்னீரிலும் என எங்கும் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்பினங்கள் நஞ்சுள்ளவையாக இருப்பதும், அதனிடம் மனிதர்கள் எதிர்பாராத தருணத்தில் ஒரு விபத்து போல் கடிபட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில வகை பாம்பினங்களால் ஏற்பட்ட அச்ச உணர்வு ஒட்டுமொத்த பாம்பினங்களையும் ஆபத்தாக என்னும் மனோநிலை அறியாமையால் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.
பாம்புக்கடியால் ஆண்டொன்றுக்கு உயிரிழப்பவர்களின் சுமார் 60000 என்று ஆய்வுக்குறிப் பொன்று சொல்கிறது . இதில் 50 % உயிரிழப்பு 30 முதல் 69 வயதடைந்தவர்களாக உள்ளனர். விஷ பாம்புக்கடியால் பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கைகால் உறுப்பிழப்பு போன்ற வாழ்க்கையையே அல்லது வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் பாதிப்புகளும் பெருமளவு ஏற்படுவதும், இந்த பாதிப்பின் எண்ணிக்கை வருடத்திற்கு 10000க்கும் அதிகமானோர் என்று கூறப்படுகிறது. அணைத்து பாம்புக்கடி விபத்துக்களும் முறையாக பதியப்படாததால் துல்லியமான எண்ணிக்கை கிடைப்பதில் பெரும் இடைவெளி நிலவுகிறது, இந்நிலையே மேலும் பாம்புக்கடி குறித்த மதிப்பீட்டை குறைக்கிறது.
ஒருபுறம் மனிதர்கள் பாதிக்கப்படுவதுபோல் மறுபக்கம் பாம்பினங்கள் அரிதாகிப் போகின்றன. மனிதர்கள் கண்ணில்பட்டு பாம்புகள் மடிவதும், விவசாயத்தில் தெளிக்கப்படும் ரசாயனங்களும், காடுகள் சுருங்கி மனித குடியிருப்புகள் பெருகி வாழிடச்சூழல் அழிக்கப்படுவதால் பாம்பினங்கள் அருகிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்டு போன தலைமுறையினால் இப்பூவுலகில் பல்லுயிர் பெரும் அழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் ஊர்வன இனத்தில் பாம்பினங்களும் அடங்கும்.
Book Details | |
Book Title | ஐ பாம்பு (I Pambu) |
Author | விஸ்வா நாகலட்சமி |
Publisher | காக்கைக் கூடு பதிப்பகம் (crownest publication) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2023 New Arrivals |