
-5 %
அன்பே ஆரமுதே
தி.ஜானகிராமன் / T.Janakiraman (ஆசிரியர்)
₹542
₹570
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789388631785
- Page: 456
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது ‘அன்பே ஆரமுதே’. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்த்தனால் மட்டுமல்ல; கதையோட்டத்தில் நிகழும் நாடகீயத் தருணங்கள் எதிர்பாரா சுவாரசியத்தைக் கொண்டிருப்பதும் காரணம். ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவறம் பூண்டு ஓடுகிறார். சந்நியாசியாக அலைகிறார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார். இந்தக் கால ஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும் உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது நாவல். இளமையில் விலகிப்போன இருவர் முதுமையில் மணமுடிக்காத தம்பதியராகவும் பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் மாறும் அதிசயமே கதையின் மையம். அதைக் கலைப் பண்புகள் துலங்க தி. ஜானகிராமனின் தேர்ந்த கை இழைத்திருக்கிறது. இன்று எழுதப்பட வேண்டிய கதையை அரை நூற்றாண்டுக்கு முன்னரே அவரது படைப்பு மனம் யோசித்திருக்கிறது
Book Details | |
Book Title | அன்பே ஆரமுதே (Anbe aaramuthey) |
Author | தி.ஜானகிராமன் / T.Janakiraman |
ISBN | 9789388631785 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 456 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |