Menu
Your Cart

ஜனநாயகத்தின் சமூக இருப்பு

ஜனநாயகத்தின் சமூக இருப்பு
-5 %
ஜனநாயகத்தின் சமூக இருப்பு
₹474
₹499
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சிக்கலின் விளைவுதான் ‘ஜனநாயகத்தின் சமூக இருப்பு’ என்ற இந்தப் புத்தகம். ஜனநாயகம் என்பது வெறுமனே அரசாங்க வடிவமல்ல என்றும், அது சமூகம் சார்ந்தது, மனக்கட்டமைப்பு சார்ந்தது என்றும் முன்வைத்த பி.ஆர். அம்பேத்கரின் பார்வையிலிருந்து பெற்றுக்கொண்டு, ஜனநாயகத்தைச் சமூக வாழ்க்கை வடிவமாகவும், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பகுதியாகவும் பார்க்க வேண்டும் என்று இந்தப் புத்தகம் வாதிடுகிறது. அம்பேத்கரின் லட்சியத்துக்குப் பொருளியல் சார்ந்தும் கருத்தாக்கம் சார்ந்தும் தடைகள் இருப்பதை அடையாளம் காணும் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை, ஜனநாயகபூர்வமான செயல் என்பதன் பல்வேறு அர்த்தப்பாடுகளையும், வீடு முதல் அரசாங்கங்கள் வரையிலான பல்வேறு புலங்களுக்குரிய ஜனநாயகங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக அணுகுகிறார். மேலும், உழைப்போடும் அறிவியல் மற்றும் மதத்தோடும் ஜனநாயகம் கொண்டிருக்கும் உறவுமுறைகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார். ஜனநாயகத்தின் மையமாக இருக்கும் அறரீதியான செயற்பாங்கு குறித்து விரிவான வாசிப்பை முன்வைக்கிறார். இறுதியாக, அரசியல் உண்மை, சுதந்திரம், தெரிவு குறித்தான கருத்துகளை விளக்கும் அதே வேளையில், ஜனநாயகபூர்வமான உணர்வுகளை வெறுமனே தேர்தல் அரசியலுக்கானதாகச் சுருக்காமல் நம்முடைய வீடுகளுக்குள்ளும் ஜனநாயக உணர்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்று வாதிடுகிறார்.
Book Details
Book Title ஜனநாயகத்தின் சமூக இருப்பு (jananayagathin samooka iruppu)
Author சுந்தர் சருக்கை
Translator சீனிவாச ராமாநுஜம்/Srinivasa Ramanujam
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..
₹190 ₹200
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200
பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து இதன் ஊடாக, சாதியம் க..
₹428 ₹450
காந்தி தன்னை "இந்து" என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் "நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்" என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது என்கிறார் கோல்வால்கர். இந்து நாகரிகத்தோடும..
₹152 ₹160