-5 %
நெல்கூட்டி
சிவசெல்வி செல்லமுத்து (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2024
- ISBN: 978-93-92543-88-3
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கொங்குவெளியின் சடங்கு சம்பிரதாயங்கள், ஐதீகம், சாதியக் கட்டமைப்பு, தொன்மக் கதைகள் என எல்லாம் ஆங்காங்கே புனைவோடு எட்டிப்பார்க்கின்றன. அதேநேரம் மிகையாக வலிந்து கதையில் திணியாமல் தேவையான அளவே பயன்படுத்தும் வித்தை கற்றவராக இருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து. இவரின் புனைவில் மறைபொருளில் வைக்கப்பட்ட மாயத்தன்மை என்று எதுவும் கிடையாது. அதீதத் தன்மையில்லாத யதார்த்த எழுத்தின் வழி, கச்சிதத் தன்மையோடு பெருநிசப்தத் தொனியிலேயே கதைகூறிச் செல்கிறார். இவர் தன் குரலைத் தீவிரமாக ஒலிக்க ஆங்காங்கே முயற்சிக்கும்போது, கதைமாந்தர்கள் அதனைத் தன் குரலாக்கிச் சமப்படுத்திவிடுகிறார்கள்.
இக்கதைகளின் கவர்ச்சித்தன்மையே சமகாலத்துக்கு முன்னான சம்பவங்களைச் சரியான விகிதத்தில் கோர்வையாக்கி, மனித மனங்களை ஊடுருவும் புனைவாக உருமாற்றுவதிலேயே அடங்கியிருக்கிறது. சென்ற தலைமுறை சனங்களின் பல்வேறுபட்ட குணச்சித்திரங்களை தற்காலத்தில் தீட்டி, உயிர்ப்புடன் வாசகர்கள் கண்முன் நடமாட வைப்பதில் வெற்றிபெறுகிறார் சிவசெல்வி செல்லமுத்து. புனைவின் அதீத தருணங்களை வெளிப்படுத்த நேரும்போதுகூட இயல்பான உத்தியில் எளிய மொழிநடையில் குழப்பமில்லாமல் எழுதிச் செல்லும் சாதுர்யம் கொண்டவராகவும் இருக்கிறார். அபார நேர்த்தியுடன் பூடகமற்று நேரடியாகக் கதைகூறும் பாணியையே கைகொள்கிறார்.
- எழுத்தாளர் என். ஶ்ரீராம்
Book Details | |
Book Title | நெல்கூட்டி (Nelkootty) |
Author | சிவசெல்வி செல்லமுத்து |
ISBN | 978-93-92543-88-3 |
Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2024 New Releases |