Menu
Your Cart

மாவீரன் அய்யங்காளி

மாவீரன் அய்யங்காளி
-5 %
மாவீரன் அய்யங்காளி
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவிலேயே அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலமான கேரளம், எப்படி அதைச் சாத்தியப்படுத்தியது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இந்தியாவிலேயே குரூர ஜாதிய கொடுமைகள் அரங்கேறிய; இழி வழக்கங்கள் நிறைந்த மாநிலமாக இருந்த கேரளம், மறுமலர்ச்சிப் பாதைக்கு வேகமாகத் திரும்புவதற்கான ஆதி விதையைத் தூவியவர் யார்? இவற்றிற்கெல்லாம் முதல் காரணகர்த்தா மாவீரன் மகாத்மா அய்யன்காளி. அவரது வீரம்செறிந்த, மயிர்க்கூச்செரியும் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப் புத்தகத்தில் அறிந்துகொள்ளப் போகிறீர்கள். திருவிதாங்கூரில் ரவிக்கை அணியத் தடை உள்ளிட்ட ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதலை நடத்தி, சாணார் கலகம் மூலம் சரித்திரம் படைத்த மக்களின் போராட்டத்தைப் பற்றியும் அறிய உள்ளீர்கள். புலயர் மக்களின் கல்வி உரிமைக்காக; பொதுவீதிகளில் நடக்கும் சுதந்திரத்திற்காக மாவீரன் அய்யன்காளி தலைமையில் நடத்திய மாட்டுவண்டிப் போராட்டத்தை ரத்தமும் சதையுமாகப் படிக்க உள்ளீர்கள். திருவிதாங்கூரில் இருந்த அடிமை வியாபாரம், அடிமை முறை முடிவுக்கு வந்தவிதம் மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அய்யன்காளி என்ற சரித்திர நாயகன் செய்து காட்டிய ஒப்பற்ற சாதனைகளை விளக்குகிறது இந்நூல்.
Book Details
Book Title மாவீரன் அய்யங்காளி (Maaveeran Ayyankali)
Author எம்.ஆர்.ரேணுகுமார்
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Pages 208
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Dalitism | தலித்தியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha