-5 %
காலரா காலத்தில் காதல்
₹561
₹590
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789361105869
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது.
காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது.
இந்த நாவலை ஸ்பானிஷிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் மா. அண்ணாதுரை, மார்க்கேஸின் நுணுக்கமான சித்தரிப்புகளையும் சிக்கலான அடுக்குகள் கொண்ட கதைகூறல் முறையையும் நுட்பமான அங்கதத்தையும் தமிழில் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.
Book Details | |
Book Title | காலரா காலத்தில் காதல் (kaalarakalathilakadhal) |
Author | காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez) |
Translator | மா.அண்ணாதுரை (Maa.Annaadhurai) |
ISBN | 9789361105869 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், Classics | கிளாசிக்ஸ், 2024 New Releases |