- Edition: 1
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
எளிய தமிழில் எக்ஸெல்
எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வரையிலும் எந்தக் கணக்காக இருந்தாலும் அதை நீங்கள் இதில் போட்டுப் பார்க்கலாம்.கணினியை எப்படி எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தரும் புத்தகங்கள் வெகு குறைவு. அதிலும் இல்லத்தரசிகளைப் பற்றி இவை கவலைப்படுவதே இல்லை.நமக்கும் கணினிக்கும் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராது என்று சொல்கிறவர்கள்கூட இதில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா என்று வியக்கத் தொடங்குவார்கள்.இந்த இரண்டிலுமே உண்மை இல்லை. உங்களது இடுப்பொடிக்கும் வேலைகள் பலவற்றையும் கணினிக் கல்வி செய்து கொடுக்கும். உங்களது அறிவார்ந்த உதவியாளராக இருந்து உங்களுக்கு உதவும். கணினிப் படிப்பு கை நிறையச் சம்பாதிப்பதற்குத்தான் உதவும். நமக்கு அது எதற்கு? என்று நினைப்பவரா நீங்கள்?கணினிப் புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. எங்களுக்குப் புரியாத நடையில்... மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் மொழியில். அதனால் கணினியே எனக்கு வேண்டாம் என்று சொல்பவரா நீங்கள்?
Book Details | |
Book Title | எளிய தமிழில் எக்ஸெல் (Eliya Tamizhil Excel) |
Author | டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin) |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 168 |
Edition | 1 |
Format | Paper Back |