
-5 %
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)
என்.ராமதுரை (ஆசிரியர்)
₹285
₹300
- Year: 2017
- ISBN: 9789386737083
- Page: 256
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன? அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம். இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும். இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா. அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Book Details | |
Book Title | அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2) (Ariviyal Ethu Yen Eppadi Paagam2) |
Author | என்.ராமதுரை (En.Raamadhurai) |
ISBN | 9789386737083 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 256 |
Year | 2017 |