-5 %
Out Of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
5C பிரதியை வாசித்தது எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், சிந்தையைத் தூண்டுவதாகவும் இருந்தது. உங்களுக்கும் அது புதிய செய்திகளைக் கூறுவதாகவும் மகிழ்ச்சியை உருவாக்குவதாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். - ஆர்தர் மில்லர், ஒளிப்பதிவிற்காக மூன்று ஆஸ்கர்விருதுகளை பெற்ற ஒளிப்பதிவாளர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நாங்கள் மாணவர்களாக இருந்த காலங்களில் ‘சினிமா ஒளிப்பதிவின் 5சிகள்’ என்ற இந்த நூல் சினிமா ஒளிப்பதிவின் பைபிளாகக் கருதப்பட்டது. ஒவ்வொரு சினிமாக் கலைஞர்களிடமும், குறிப்பாக ஒளிப்பதிவாளர்களிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத நூல். - P.C.ஸ்ரீராம் 1980 களில் திரைப்படக் கல்லூரியில் ஒளி வீரர்களாக நுழைந்த அனைவருக்கும் எட்டாக் கனியாக இருந்த புத்தகம்! சினிமா ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை தினமும் திருக்குறளைப் படிப்பதுபோல படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். - ராஜீவ் மேனன் சினிமா ஒளிப்பதிவின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் சினிமா ஒளிப்பதிவின் 5சி’க்கள் மிகவும் புகழ்பெற்ற நூல்.சினிமா ஒளிப்பதிவாளர்களின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இந்நூல் ஒளிப்பதிவின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியமாக விளக்குகிறது. - B. கண்ணன் ஜோசப் வி.மாசெல்லி எழுதிய நூல். சினிமா ஒளிபதிவு குறித்து எழுதப்பட்ட நூல்களில் தலை சிறந்த நூல் என அந்தத் துறையைச் சார்ந்த பல வல்லுனர்களாலும் மதிக்கப்படும் நூல். சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா ஆர்வலர்கள் அனைவருக்குமே பயனுள்ள நூல். தமிழ் மக்களின் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவமும் தாக்கமும் கொண்டுள்ள சினிமா குறித்த புதியகோணம் (பாரதி புத்தகாலயத்தின் அங்கம்) நூல்வரிசையில் ஒரு மைல்கல்.
Book Details | |
Book Title | சினிமா ஒளிப்பதிவின் 5சி' கள் (Cinema Olippathivin 5cgal) |
Author | ஜோசப் வி.மாசெல்லி (Josap Vi.Maaselli) |
Translator | வேட்டை எஸ்.கண்ணன் (Vettai Es.Kannan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Category | Cinema | சினிமா |