-5 %
நினைவே ஒரு சங்கிதம்
ஜி.ஆர்.சுரேந்திரநாத் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் தனது வாழ்க்கை அனுபவங்களை தமிழின் சூப்பர்ஹிட் பாடல்களுடன் இணைத்து எழுதப்பட்ட இந்நூல் சுவாரஸ்யமான பின்னணியையும் சித்தரிக்கிறது. அப்பாடல்கள் உருவான நாள் கல்லூரியில் படிக்கும்போது அம்பியாகவும், ரெமோவாகவும் ‘அன்னியன்’ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது ‘காந்திதாசன்’ என்ற பெயரில் சமூக அவலங்கள் குறித்து புரட்சிகரமான கவிதைகள் எழுதுவேன். இதே காலகட்டத்தில் நான் ரெமோவாகவும் வாழ்ந்து வந்ததால், ‘வானவில்லோன்’ என்ற பெயருடன் பெண்களை வர்ணித்து காதல் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்தேன்.
“அந்நியன்’ படத்தில் பிரகாஷ்ராஜிடம், விக்ரம் ஒரே சமயத்தில் அம்பியாகவும், ரெமோவாகவும் மாறி மாறிப் பேசுவாரல்லவா? அதே போல் நான் நண்பன் ரமேஷிடமும், எட்மண்டிடமும் காந்திதாசனாகவும், வானவில்லோனாகவும் மாறி மாறி பின்வருமாறு பேசுவேன்: ரமேஷிடம், “பெண்கள வெறும் போகப்பொருளா பாக்கிற வரைக்கும் அவங்க வாழ்க்கைல முன்னேற்றமே இருக்காது…” என்று சொல்லிவிட்டு சட்டென்று எட்மண்டிடம், “டேய்… ‘ஒரு புதிய
கதை’’ங்கிற பட போஸ்டர்வு ஒரு புதுப் பொண்ணு நிக்குதே… யாருடா அது?” என்று கேட்டால், “மீனாண்ணன்…” என்பான் எட்மண்ட் மரியாதையாக. நான் மீண்டும் காந்திதாசனாக மாறி ரமேஷிடம் சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் குறித்து கவலைப்பட்டுவிட்டு எட்மண்டிடம், *லட்சுமி தியேட்டர்ல இந்த வாரம் காலைக்காட்சி மலையாளப்படம் என்னடா போட்டிருக்கான்?’ என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரமேஷ் விடாமல், “இந்த வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க என்னதாண்ணன் பண்றது?” என்று சீரியஸாக கேட்டு என்னை காத்திதாசனாக மாற்றிவிடுவான். நான் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்குள், ஒரு ஜடையை முன்பக்கமும், மற்றொரு ஜடையை பின்பக்கமும் போட்டுக்கொண்டுச் செல்லும் ஜோதியின் கிரியேட்டிவிட்டியை வியந்து பேசும் வானவில்லோனாக மாறிவிட்டதை இப்போது நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது.
அக்காலத்திய இளைஞர்களின் இவ்வாறான மன உணர்வுகளை அற்புதமாக சித்தரித்த தமிழ்ப் பாடல் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது’. இப்பாடலிலிருந்துதான் புகழ்பெற்ற இளையராஜா-வைரமுத்து கூட்டணி உருவானது. எப்படி உருவானது?
Book Details | |
Book Title | நினைவே ஒரு சங்கிதம் (ninaive-oru-sangeetham) |
Author | ஜி.ஆர்.சுரேந்திரநாத் (Ji.Aar.Surendhiranaadh) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2023 New Arrivals |