-10 %
இந்திர குமாரி
சாண்டில்யன் (ஆசிரியர்)
₹122
₹135
- Edition: 05
- Year: 2021
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயையைப் படரவிட்டுக் கொண்டதைக் கண்ட சண்டதண்டன் மகள், அவன் சாதாரண நாடோடியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள்.
உணர்ச்சிகளை அத்தனை விரைவில் அடக்கக் கூடிய வீரன் அசாதாரணமானவன் என்பதை ஊர்ஜிதமும் செய்து கொண்டதன் விளைவாக “வீரரே! நான் கேட்ட பரிசு அத்து மீறியதானால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவனுக்குச் சமாதானமும் சொன்னாள். அந்தச் சமாதானத்தைச் சொன்னபோது குழலைப் போல் ஒலித்த அவள் குரலைக் கண்டு பிரமித்த அந்த வாலிபன் “கேட்ட பரிசைக் கொடுப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது” என்று மிகுந்த கவலையுடன் சொன்னான்.
அவன் கவலையைத் தவறாகப் புரிந்து கொண்ட பல்லவன் மகள் “நமக்குச் சொந்தமான எதைக் கொடுப்பதிலும் மனச் சிக்கல் இருக்கத்தான் இருக்கும்” என்று கூறி விட்டு “விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எது வாயிருந்தாலும் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினான்.
Book Details | |
Book Title | இந்திர குமாரி (Indhira kumari) |
Author | சாண்டில்யன் (Saantilyan) |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Pages | 96 |
Year | 2021 |
Edition | 05 |
Format | Paper Back |
Category | Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |