
நாகதீபம்
சாண்டில்யன் (ஆசிரியர்)
₹200
- Edition: 1
- Year: 2015
- Page: 288
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டிற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கமே அடங்கி இருக்கும்.
ராஜபுத்திரனான ஹரிதாஸ் ஜாலா போரில் மொகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைவாசத்தில் இருந்தவனை அரசர் ஜஹாங்கீர் விடுதலை செய்கிறார்,அதற்காக மேவார் ராணாவிடம் இருக்கும் குடும்ப சொத்தான நாகதீபம் என்றழைக்கப்படும் ரத்தினத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் போர் நடவடிக்கைகள் அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் மீது தொடுக்கப்படாது என்ற உறுதியையும் அளிக்கிறார்.
மேவார் ராணாவிடம் படைத் தளபதியாக இருந்த ஹரிதாஸ் ஜாலா தற்போது மொகலாயத் தூதுவனாக மாறி நாகதீபத்தைக் கைப்பற்ற ராஜபுதனத்திற்குச் செல்கிறான்,அவர்களின் பிதாமகரான ஜயன் சந்தாவத்தின் மூலம் சிறுவயதில் அவரின் பேத்தியை தான் திருமணம் செய்து கொண்டது விவரம் அறிய நேர்கிறது.
ராஜாபுதனப் பெண்ணான பிதாமகரனின் பேத்தி மொகலாயத் தூதுவனாக மாறிய ஹரிதாஸ் ஜாலாவை கணவனாக ஏற்க மறுப்பவள் அவனின் உள்ளத்தில் புதைந்து கிடந்த துன்பத்தைத் தெரிந்த பின்பு அவனுடன் வாழ விரும்பினாலும் ஹரிதாஸ் ஜாலாவால் தான் செய்து கொண்டிருக்கும் தூதுவனான தவறை நினைத்து எதிலும் விருப்பத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது.
எதற்காகத் தூதுவனாக வந்தானோ அந்த நாகதீபத்திற்குப் பதினைந்து நாள் காவலாக இருக்கும் பொருட்டு மேவார் ராணா ஹரிதாஸ் ஜாலாவிடமே அதை ஒப்படைக்கிறார்.அதன் முடிவில் ஜஹாங்கீர் மகனிடம் அதைக் கொடுத்து தன் ஆணையை முடித்துக் கொண்டவன் மொகலாயர்களை எதிர்த்து போரிட விரும்பியதை அவனின் ராணாவாலே தடுத்து நிறுத்தப்படுகிறது.
பிதாமகரையும் போரில் இழந்தபிறகு நாட்டில் இருக்கும் எஞ்சிய உயிர்களுக்காகச் சமாதானத்திற்கு மேவார் ராணா உடன்படுகிறார் அதை முன்னின்று ஹரிதாஸ் ஜாலா செயல்படுத்துகிறான்.
Book Details | |
Book Title | நாகதீபம் (Nagadeepan) |
Author | சாண்டில்யன் (Saantilyan) |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Pages | 288 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |