Menu
Your Cart

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 1)

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 1)
-5 %
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 1)
கங்கை அமரன் (ஆசிரியர்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
*** என்னோட நிம்மதிக்கு வந்த சோதனை சசிகலாகிட்ட இருந்து எனக்கு அழைப்பு. ''சொல்லுங்கம்மா''..என்ன விஷயம்?. சசி, ''கொஞ்சம் வீடு(போயஸ்கார்டன்)வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?உங்ககார்ல வர வேண்டாம் நான் கார் அனுப்பறேன். அதுல வாங்க'' கார் வந்துச்சு..கூட்டிட்டு போனாங்க. ''ஜெயலலிதா''அம்மாவை பாத்தேன். நல்ல வரவேற்பு! ''நீங்க வந்ததுல சந்தோசம்''னாங்க. நான் கிளம்புற நேரம். ''தாம்பூல பை'' மாதிரியான ஒரு பிளாஸ்டிக் பையை என்னிடம் கொடுத்தார் சசிகலா. நான்,'என்னம்மா இது?' சசி,''இல்ல..மொதமொதல்ல வீட்டுக்கு வந்துருக்கீங்க...பிடிங்க. எடுத்துட்டு போங்க..வீட்டுல போய் பாருங்க'' நான் அந்தப் பையை வாங்கிகிட்டேன். அவங்க கார்லயே கொண்டு வந்து என் வீட்டுல விட்டாங்க. அந்தப் பைய பிரிச்சு பாத்தேன். கொஞ்சம் பணம் இருந்திச்சு. நான் உடனே சசிகலாவுக்கு போன் பண்ணினேன். என்னம்மா.. பைல பணம் இருக்கு.. சசி,''மொதமொதல்ல வீட்டுக்கு வந்தீங்க....லட்சுமி அண்ணே'' ''சரிம்மா''னு சொல்லிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் எனக்கு அழைப்பு வந்துச்சு. போயஸ் கார்டனுக்கு போனேன். சசி, ''ஓல்டு மகாபலிபுரம் ரோடு வழியா போனேன். போற வழியில 'பையனூர்' இடம் பாத்தேன்.ரொம்ப நல்லாருக்கு அண்ணே. நான், ''ரொம்ப கஷ்டப்பட்டு, பாட்டெழுதி, மியூசிக்பண்ணி, கடுமையா உழைச்சு, சிறுகசிறுக பணம் சேர்த்து வாங்கினது அம்மா. அந்த இடத்த வாங்கி நிறைய வேலை பாத்து செழிப்பாக்கினேன்.'' சசி, ''அதான்..பாத்தேன்,அண்ணே. அதுல வீடு கூட நல்லா பிளான் பண்ணி கட்டி இருக்கீங்க.அந்த வீடு டிசைன் கூட ரொம்ப நல்லா இருக்குது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அந்த வீடும் வீட்டை சுற்றியுள்ள அட்மாஸ்பியரும். சி.எம்.அங்க நேரம் கிடைக்கும் போது தங்கிட்டு வந்தா அவங்களுக்கு மனசுக்கு ரிலாக்ஸ்டாக'' இருக்கும். நான்,''ஐயோ..சந்தோசம்.அவங்க தாராளமா தங்கட்டும். சாவிய குடுத்துடறேன்.எப்ப வேணும்னாலும் அவங்க அங்க தங்கிக்கட்டும்.'' சசி, ''இல்லண்ணா..அது சம்பந்தமா உங்ககிட்ட பேசணும்.ஒரு ஐடியா இருக்குங்கறத சொல்றதுக்குதான் உங்களை வர சொன்னேன்.இன்னொரு நாள் நாம் இதைப் பத்தி பேசலாம்.'' ''ஜூஸ்'' குடுத்தாங்க . குடிச்சுட்டு கிளம்பி வந்தேன். இது சமயம் ஜெயா டிவியோ,ஜெ.ஜெ.டிவியோ ஆரம்பிக்கிற வேலைல இருந்தாங்க. அதுல என்னைய புரோக்ராம் டைரக்டரா வேலை செய்யக் கேட்டாங்க. மக்கள் திலகம், கலைஞர் ஐயா-ரெண்டு பேர்களோட பிரியத்துக்கு உரியவனா ஒரே காலகட்டத்துல பழகினவன்,அதனால நான் உங்க டிவில இருந்தா..எனக்கு அதிமுக கட்சி முத்திரை விழுந்துடும்.நான் பொதுவான ஆளாகவே இருக்க விரும்புகிறேனு சொல்லி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டேன். ''சி.எம்.விங்ல இருந்து பேசுறோம்''னு என் வீட்டுக்கு வந்தன மிரட்டல் கால்கள்...
Book Details
Book Title பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 1) (Pannaipuram Express (HB - Part 1))
Author கங்கை அமரன் (Kangai Amaran)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 622
Year 2021
Edition 02
Format Hard Bound
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Criticism | விமர்சனம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha