Menu
Your Cart

மதி கார்ட்டூன்ஸ்

மதி கார்ட்டூன்ஸ்
-5 %
மதி கார்ட்டூன்ஸ்
மதி (ஆசிரியர்)
₹470
₹495
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது. ஆனால் கார்ட்டூன் என்பது அதைவிட பலபடிகள் மேலே சென்று நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாக பார்த்து, அதை தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்த கருத்தின் ஆழத்தை சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்துவது என்பது நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள் பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது. கார்ட்டூன் என்ற சொல்லை கேலிச்சித்திரம் என்றோ, சிரிப்புப்படம் என்றோ சொல்லுவது முழு அர்த்தத்தைத் தருவதில்லை. எல்லார் மனத்திலும் இருக்கிற, அவரவர் காலம் சம்பந்தப்பட்ட நடப்புகளின் மீது ஒரு காலத்தில் தோன்றி மறைகிற ரகசியமான கமெண்டுகளை பொறிபோன்று வெடித்துச் சிதறி மறைகின்ற சிந்தனைகளை உள்வாங்கி, காமிரா வெளிச்சத்தில் எடுத்துக்கொண்டு திருப்பித் தருவது போன்ற அரிய கலை இது. ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்ட வேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையைய் வலிமையாய்ச் சொல்லிவிடும் "மதி"யின் மதி மதிக்கப்பட வேண்டியது. ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் படைக்கின்ற புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள் வரிசையில் வைக்கின்ற அளவுக்குத் திறமை படைத்தவர் மதி. மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு?!) காமிராவுக்கான Body Language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்! மதியின் கார்ட்டூன்களைப் புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்!
Book Details
Book Title மதி கார்ட்டூன்ஸ் (Mathi Cartoons)
Author மதி (Madhi)
ISBN 9788184931747
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 352
Published On Nov 2008
Year 2009
Format Hard Bound
Category TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கனவுப் பட்டறைமனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் பரு..
₹152 ₹160