

-5 %
Out Of Stock


ஆக்கை நூல்
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆசான் ம.செந்தமிழன் எழுதிய நூல்களில் மூல நூல், வடிவு நூல், எண் நூல் ஆகியன படைப்பிலக்கணத்தைப் பற்றி விளக்குபவை.
மூல நூல் மூலத்தைப் பற்றியும், வடிவு நூல் மூலத்திலிருந்து அணு முதலாகிய வடிவங்கள் விரிந்து அமைவது பற்றியும், எண் நூல் மூலத்திலிருந்து விரியும் வடிவங்களை அமைக்கும் ஒழுங்காகிய எண்கள் பற்றியும் விளக்குகிறது.
உணெர்வெனும் மூலத்திலிருந்து விரிந்து வெளி முதலாக நிலம் ஈறாய ஐம்பூதங்கள் அமைகின்றன.
புவியில் உயிரினப் படைப்பின் ஆதி நிலையான நுண்ணுயிரிகளைப் பற்றியும் அதன் படிநிலை வளர்ச்சிகளாக எவ்வாறு தாவர சங்கம உயிரினப் பெருக்கம் அமைந்தது என்பது பற்றியும் விளக்குகிறது ஆக்கை நூல்.
உடல், ஆக்கை, யாக்கை எனும் சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகளுடன் தொடங்குகிறது நூல்.
”உயிர் வாழிகளின் ஆதி நிலை ஆக்கை. ஆக்கையின் அடுத்த நிலையாக உடல் அதற்கடுத்த நிலையாக யாக்கை ஆகியன உள்ளன” என்று விளக்கம் சொல்கிறது நூல்.
யாத்தல் என்றால் கட்டுதல் என்பது பொருள். அவ்வகையில் நுண்ணுயிரிகள் கட்டியமைத்த உடல்களே யாக்கை. வழக்கம் போல தமிழ் மொழியில் தனியே அறிவியல் என்று தேவையில்லை. ”மொழியே அறிவியல், சொல்லே அதன் விளக்கம்” என்பதற்கு மற்றுமொரு சான்றே இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள்.
உடலுக்கும் யாக்கைக்குமான நுட்ப வேறுபாடு குறித்த விளக்கம் இனப்பெருக்கத்தின் அடிப்படையிலான உயிரின வகைமையையே வேறுபடுத்திக் காட்டுகிறது.
மூலத்திலிருந்து ஆற்றல் வெளிப்பட்டு அணு முதலான வடிவங்கள் ஆவது பற்றி ஆசானின் முந்தைய நூல்கள் விளக்குகின்றன. அப்படியாக ’ஆற்றல் வெளிப்பட்டு ஐம்பூதங்கள் அமைந்து எந்த ஒரு குறிப்பிட்ட நிலையில் முதல் உயிரினம் உருவாகியிருக்க முடியும்?’ என்னும் கேள்வி எழுப்புவது மிகப் பெரும் மறை பொருளைப் பற்றிய தேடல். ஆக்கை நூல் அதற்கான விடையாக அமைகிறது.
மூலத்திலிருந்து ஆற்றல் வெளிப்பட்டு வடிவங்களாகி உயிர்கள் அமைகின்றன. ஆதி நிலை உயிர் வாழிகளாக நுண்ணுயிரிகளும் அடுத்த நிலையில் உருவான எவையுமே அந்நுண்ணுயிரிகள் கூடி அமைத்த கூட்டு உடலிகளாகவும் அமைகின்றன.
Book Details | |
Book Title | ஆக்கை நூல் (aakkainool) |
Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Philosophy | தத்துவம் - மெய்யியல் |