Menu
Your Cart

மெனிஞ்சியோமா

மெனிஞ்சியோமா
-5 %
மெனிஞ்சியோமா
கணேசகுமாரன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காயமுற்று சீழ் பிடித்த பாகத்தை அறுத்தெரியும் வலி, பிறப்புறுப்பில் கீறி மருந்திட்ட நிலையில் சந்துரு உச்சம் எய்துவதாய் எழுதப்பட்டிருக்கும் வரி ஒரு வலிக்கொண்டாடியால் மட்டும் எய்தக்கூடிய பித்தம். - நேசமித்ரன் Most of us always feel the scenario of a hospital as unpleasant, stingy, compressed, dipped in the aroma of medicines, cleansing liquids, Iodine etc… unless one or his closed ones are associated with it, in an life retrieval mission. But in this book, the author vividly records the scenario of an hospital in a way, even the clinical staffs there can’t accurately describe. Another major wall of this narration is the mentioning of every medical term and phrases associated with meningioma in a well fitted manner. - நவீன்ராஜ் அருணாச்சலம் மரபான கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, மாற்றாக வேறொரு கதை சொல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார் கணேசகுமாரன். அதனாலேயே இது வரவேற்கப்பட வேண்டிய ஓர் அம்சமாக ஆகியிருக்கின்றது. சற்றே ஆழ்ந்து வாசிக்க முயன்றால் படைப்பாளி பல்வேறு தளங்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறார் என்பது புரியக்கூடும். அந்த ஒன்றிணைப்பு ஆழ்ந்த மனவலியைத் தருவதாகயிருக்கின்றது. படைப்பின் வழியே, முடிவற்ற படிமங்களாக, உருவகங்களுமாகத் தன்னை வெளிப்படுத்தும் அந்த வலியை வாசகன் உணரும்படியாக, உரைநடையில் கவித்துவமானதாகச் செய்திருக்கின்றார். - அர்ஷியா
Book Details
Book Title மெனிஞ்சியோமா (Meningioma)
Author கணேசகுமாரன் (Kanesakumaaran)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தி..
₹105 ₹110
சுயகொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்க வைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கை..
₹124 ₹130