அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை.
சந்தோஷமாகவே இருக்கிறது.
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை.
இவளுக்கும் இருந்திருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகிற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இர..
₹90 ₹95
புத்தரைப் போல
நின்று பார்த்தேன்.
கூடவில்லை.
புத்தரைப் போல
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்...
₹86 ₹90
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன், எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை. உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல அன்றாடம்...
₹90 ₹95
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்.
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை.
சொல்லத் தெரியுமா
முன்கூட்டி
பறக்கிற பட்டுப்பூச்சி
உட்காரத் தேர்வது
எந்தப் பூவின்
இதழை என்று .....
₹86 ₹90
ஒரு மின்னல் கீற்றுச் சிறு தள்ளல், நீரிலிருந்து உருவி வெற்று வெளியில் அரை வட்டமிட்டு நீருள் செருகியது ஒற்றை மீன் என்றோ பார்த்த மகாநதி இன்றுவரை பாய்வது அந்த நொடிநேர அரைவட்டத்தின் கீழே தான்...
₹181 ₹190