Menu
Your Cart

திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்

திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்
-5 % Out Of Stock
திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்

திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன் என்னும் இந்நூலாசிரியர் எங்கள் அன்புத் தந்தை முனைவர் பா.கிருட்டிணமூர்த்தி ஆவார்.


தனித் தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற இவர், தமிழ், பொது ஆட்சியில், காந்திய சிந்தனை, கல்வியியல் ஆகியவற்றிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். குறிப்பாக மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில், காந்திய சிந்தனை முதுகலைப் பட்டப் படிப்பில், தேசிய அளவிலான பல்கலைக்கழக முதன்மைத் தகுதியைப் பெற்று, தமிழக ஆளுநர் மேதகு ரோசையா அவர்களிடம் பட்டமும், பதக்கமும், பணப்பரிசும் பெற்றுள்ளார். இவர் ‘பண்டைத் தமிழிலக்கியங்களில் வைணவக் கூறுகள்’, ‘ஆசிரியர் பட்டயப் பயிற்சி தமிழ்க் கலைத் திட்டம் - ஓர் ஆய்வு’ என்னும் தலைப்புகளில் தமிழ், கல்வியியல் துறைகளில் மேற்கண்ட இரு ஆய்வுகளுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள பெற்றியாளர்.


இவர் சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 2 தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது சென்னை, பல்லாவரம் விநாயகா கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தன் கல்விப் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.


மரபுக் கவிதையாக்கும் ஆற்றலுடைய இவர் இரு பிள்ளைத் தமிழ், மூன்று அந்தாதி நூல்களையும், ஒரு குழந்தைப் பாடல் நூலையும் படைத்துத் தமிழன்னைக்கு அணி செய்து அழகு பார்த்துள்ளார்.


தன் பள்ளிப் பருவம் தொட்டே இசை பாடிப் பல பரிசுகளை வென்றுள்ள இவர், தொடர்ந்து தமிழிசையில் நாட்டம் கொண்டு இன்றளவும் முயன்று பயின்று வருகிறார்.


இத்தகைய மாண்புடையவர், எங்களுக்குத் தெவிட்டா நல் இன்ப அன்பு காட்டி ஆற்றுப்படுத்தும் உன்னதத் தந்தை என்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.


                                                                                                  கி.நப்பின்னை, பி.டெக்.

                                                                                                    கி.தாமரை, பி.டெக்.



Book Details
Book Title திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன் (Thirukural Tamil Marapurai Thiran)
Author முனைவர் பா.கிருட்டினமூர்த்தி (Munaivar Paa.Kiruttinamoorththi)
Publisher வையவி பதிப்பகம் (Vaiyavi Pathipagam)
Pages 168
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha