- Edition: 1
- Year: 2007
- Page: 204
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஐந்திணை வெளியீட்டகம்
சங்க இலக்கியம் எளிய தமிழில் பாலைக்கலி
ஐந்திணைப் பதிப்பகம் நிறுவிய இவர், இன்று பாலைத் திணையைப் பசுந்தமிழ்ச் சோலைத் திணையாக வடித்துத் தந்துள்ளார்.
ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல தலைப்பைத் தந்திருப்பது; பாடலின் சூழலை - கூற்று விளக்கத்தை எளிய முறையில் தருவது; பாடல்களுக்கு உட்தலைப்புத் தந்து, இது தரவு - இது தாழிசை - இது தனிச்சொல், இது சுரிதகம் எனச் சுட்டியிருப்பது யாவும், இவர் எளிய தமிழில் பாலைக் கலியைத் தரும் கட்டமைப்பாகும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும், கட்டம் கட்டி, அப்பாடலின் பயனை விளக்கியுள்ளார். இறுதியில் பாலைப் பாடல்களைப் புரட்டிப் பார்த்து, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.
இறுதியில் பாலைக் கலியையே - மூலநூலையே தந்து அருஞ்சொற்பொருள் விளக்கமும் தந்துள்ளார். கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகைப் பாடல்கள் கடினமானவை எனினும், கவிஞர் குழ.கதிரேசன் அவற்றைக் கவிதை வடிவிலேயே எளிமைப்படுத்தித் தந்துள்ளார்; இது ‘செவ்வியல் தமிழுக்கு அவர் செய்யும் அரிய பணி’ ஆகும். இத்தகு மழலைக் கவிஞரை, மக்களும் அரசும் மேன் மேலும் போற்றிப் பாராட்டி ஊக்கம் தரவேண்டும் என்பது என் விருப்பமும் வாழ்த்துமாகும்!
-முனைவர் தமிழண்ணல்
மதுரை
Book Details | |
Book Title | சங்க இலக்கியம் எளிய தமிழில் பாலைக்கலி (Sanga Elakiyam Eliya Tamizhil Paalaikali) |
Author | கவிஞர் குழ.கதிரேசன் (Kavignar Kuzha.Kadhiresan) |
Publisher | ஐந்திணை வெளியீட்டகம் (Aindhinai Veliyeetagam) |
Pages | 204 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |