Menu
Your Cart

கங்கா தேவியின் மதுரா விஜயம்

கங்கா தேவியின் மதுரா விஜயம்
-5 %
கங்கா தேவியின் மதுரா விஜயம்
எஸ்.கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கங்களாகக் கருதப்படுவது ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மதுரை சுல்தானிய ஆட்சி. தமிழர்களைப் பெரும் துன்பத்தில் தள்ளிய அந்த ஆட்சியிலிருந்து தமிழகம் எப்படி விடுபட்டது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. விஜயநகரப் பேரரசின் இளவலான குமார கம்பண்ணர் தமிழகத்தை மீட்ட அந்த வரலாற்றை சம்ஸ்கிருதத்தில் காவியமாக வடித்தவர்அவரது மனைவியான கங்காதேவி. சுல்தான்கள் ஆட்சியில் தமிழகம் பட்ட துன்பங்களை அவர் விவரிக்கும்போது எப்பேர்ப்பட்ட பேராபத்திலிருந்து தமிழகம் மீண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் காவியத்தையும் அது எழுதப்பட்ட பின்புலத்தையும் புரிந்து உள்வாங்கிக் கொள்வதற்கு அக்காலத்தில் தமிழகம் இருந்த நிலையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் பற்றிய புரிதல் அவசியமாக உள்ளது. அதன் காரணமாக இந்த நிகழ்வின் வரலாற்றுப் பின்னணியோடு மதுரா விஜயம் என்ற இந்த நூலின் தமிழாக்கத்தைத் தந்திருக்கிறார் எஸ்.கிருஷ்ணன். தமிழகத்தின் மீது ஏற்பட்ட சுல்தானியப் படையெடுப்புகள்மதுரை சுல்தான்களின் ஆட்சிதமிழகத்தின் வடபகுதியின் ஆட்சி செய்த சம்புவரையர்களின் வரலாறுவிஜயநகரப் பேரரசின் இளவரசராக இருந்த கம்பண்ணர் தமிழகத்தின் மீது படையெடுப்பதற்கான காரணங்கள் என்று பல செய்திகளைக் காவியத்தின் போக்கோடு தொட்டுச் செல்கிறது இந்த நூல்.
Book Details
Book Title கங்கா தேவியின் மதுரா விஜயம் (ganga deviyin madura vijayam )
Author எஸ்.கிருஷ்ணன் (Es.Kirushnan)
ISBN 9788119550807
Publisher சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Pages 134
Year 2024
Edition 1
Format Paper Back
Category Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha