-5 %
திருவாசகம்: எல்லோருக்குமான எளிய உரை
டாக்டர் ப.சரவணன் (ஆசிரியர்)
₹713
₹750
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம்.
ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும் நிலையையும் அனுபவத்தையும் அருளவல்ல அருள் நூல் திருவாசகம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து ஓதுவார்தம் உள்ளத்தைச் சிக்கெனப் பிடித்துத் தம்பால் ஆழ்த்தும் உயர்நூல் திருவாசகம்.
ஆசை அற வேண்டும், பிறவி விழ வேண்டும். வீடு பெற வேண்டும் என நினைப்போரை முத்திக் கரையில் கொண்டு சேர்க்கும் தெப்பம் திருவாசகம். உயிர்க்கு ஊதியம் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை விளக்குவதும், தில்லைக்கூத்தன் தம் கைப்பட எழுதிய பெருமையை உடையதுமான தேன்சுவையைப் பயப்பதும் திருவாசகமே.
நிலையில்லா உலகியல் இன்பத்தையும் நிலைபெற்ற சிவாநுபவத்தையும் இணைத்துப் பாடும் இயற்றமிழ்ப் பனுவலான இத்திருவாசகத்தை எல்லோருக்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் தமிழ்ப்பரிதி டாக்டர் ப. சரவணன்.
Book Details | |
Book Title | திருவாசகம்: எல்லோருக்குமான எளிய உரை (thiruvasagam-ellorukkumaana-eliya-urai) |
Author | டாக்டர் ப.சரவணன் (Taaktar Pa.Saravanan) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Exegesis | விளக்கவுரை, Hindu | இந்து மதம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |