Menu
Your Cart

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
-5 %
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
சசி தரூர் (ஆசிரியர்), சத்யானந்தன் (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வகுப்புவாதமும் மதவாதமும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் முன்னெப்போதையும்விட இன்று அதிகம் வலுவடைந்திருப்பதற்குக் காரணம் இந்துத்துவம் மிகப் பெரும் அளவில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பதுதான். சுதந்தர இந்தியாவில் முதல் முறையாக மதமும் அரசியலும் பிரிக்கமுடியாதபடிக்கு ஒன்றிணைந்திருக்கிறது. அதன் விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில், இந்து மதத்தை முறைப்படி மறு அறிமுகம் செய்யவேண்டியது அவசியமாகிறது. காரணம் இந்துத்துவம் என்பதும் இந்து மதம் என்பதும் ஒன்றேதான் என்று பலரும் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். இந்துத்துவத்தின் பெயரால் நடத்தப்படும் அனைத்து அத்துமீறல்களுக்கும் இந்து மதத்தைப் பொறுப்பாக்கும் தவறைப் பலர் செய்கிறார்கள். யார் இந்து? எது இந்து மதம்? இந்து மதம் எவற்றையெல்லாம் ஏற்கிறது, எவற்றை நிராகரிக்கிறது? அது பிற மத நம்பிக்கைககளை எப்படிப் பார்க்கிறது? தனி மனிதனின் உணவு, உடை, சிந்தனை ஆகியவற்றை அது கட்டுப்படுத்துகிறதா? சஷி தரூரின் இந்தப் புத்தகம் இந்து மதத்தின் மெய்யான பொருளை எளிமையாக எடுத்துரைக்கிறது. மதத்தின் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் அதே சமயம், இந்துத்துவத்தின் அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
Book Details
Book Title நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? (Naan Yen Hinduvaaga Irukkiren)
Author சசி தரூர் (Sasi Tharoor)
Translator சத்யானந்தன் (Sadhyaanandhan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 296
Year 2022
Edition 02
Category Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Hindu | இந்து மதம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha