-5 %
தலித் சினிமா (அரசியல் - அழகியல் - அறவியல்)
ஜமாலன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2019
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிழல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சினிமா ஆய்வாளர் ஜமாலன் அவர்களின் தலித் சினிமா: அழகியல், அரசியல், அறவியல், தமிழ் சினிமா சார்ந்த புத்தக உலகின் தேவையை நிரப்பும் முக்கியமான புத்தகம். கடந்த ஏழாண்டுகளில் குறிப்பாக தம்பி பா.ரஞ்சித் அவர்களின் அட்டக்கத்தி(2012)யின் வெற்றிக்குப் பிறகு தலித் சினிமா பற்றிய சொல்லாடல் தமிழ் சூழலில் விரிவும் ஆழமும் அடைந்திருக்கிறது. இளம் மாணவர்களுக்கு தலித் சினிமாவைப் பற்றிய வரலாற்றுப் புரிதலுக்கும் அதன் அழகியல் மற்றும் அரசியலின் தனித்துவத்துக்கும் இந்தப் புத்தகம் விரிவான அறிமுகத்தையும், ஆழமான அலசலையும் வழங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் வீரியமடைந்திருக்கும் தலித் சினிமாவை அதன் முன்னோடி படங்களையும் இயக்குநர்களையும் அவர்களுடைய கருத்தியலையும் வைத்துப் புரிந்துகொள்வது அவசியம். அவர்களுடைய உருவ-உள்ளடக்க உந்துதலை அறிந்துகொள்ள அவர்களது அழகியல் மற்றும் அரசியலின் அறிவு இன்றியமையாதது. அரசியலும் அழகியலும் கருத்தியலினால் செலுத்தப்படுகிறது. அக்கருத்தியலின் அமைப்பியல் மற்றும் உளவியலை உணர, அவர்களது பின்னணியும் அதில் வர்க்கத்தின் பங்களிப்பையும் அறிவது முக்கியமானது.
Book Details | |
Book Title | தலித் சினிமா (அரசியல் - அழகியல் - அறவியல்) (dalit-cinema-nizhal) |
Author | ஜமாலன் (Jamaalan) |
Publisher | நிழல் வெளியீடு (Nizhal Publications) |
Pages | 200 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |