- Edition: 1
- Year: 2016
- Page: 296
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
பலூட்டா அறுவடையில் பங்கு...
…’ஆடு மேய்க்கின்ற ஒரு சிறுவன் தனது தொப்பியைத் தொலைத்து விட்டான். அது வெறும் தொப்பிதான் என்றாலும் அவனுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. உண்ணும்போதும், குடிக்கும்போதும் அதன் நினைவு அடிக்கடி வந்து வருந்தினான். ஒரு நாள் வழக்கம்போல் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். அப்பொழுது பொழுதை இன்பமாகக் களித்திருக்க வேண்டி ஒரு இளம் தம்பதிகள் அங்கே வந்திருந்தனர். அவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆடு மேய்க்கும் சிறுவன். அப்போது “ கண்ணே, உன் கண்களில் நான் நிலவைப் பார்க்கிறேன், சூரியனைப் பார்க்கிறேன், பல வண்ண மலர்களைப் பார்க்கிறேன், அந்தக் கடலைப் பார்க்கிறேன், மறைகின்ற அந்தியை பார்க்கிறேன், மேலும் , இந்த வனம் முழுவதையும் பார்க்கிறேன்”, என்கிறான் அந்த இளம் வாலிபன். அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாத அந்தச் சிறுவன், ‘அப்படியென்றால் தொலைந்து போன என் தொப்பியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’, என்றான்…
Book Details | |
Book Title | பலூட்டா - அறுவடையில் பங்கு... (Paluttaa Aruvadaiyil Pangu...) |
Author | ஊர்மிளா பவார் (Oormilaa Pavaar), தயா பவார் (Thayaa Pavaar) |
Translator | ச.பிரபு தமிழன் (Sa.Pirapu Thamizhan) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 296 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |