- Edition: 12
- Year: 2022
- ISBN: 9789387383630
- Page: 552
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா? என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.
"பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது' என்கிறார் நூலாசிரியர்.
"நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை... இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?' என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார். நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.
Book Details | |
Book Title | சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு | Sapiens (sapiens-a-brief-history-of-humankind) |
Author | Yuval Noah Harari (Yuval Noah Harari) |
Translator | நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam) |
ISBN | 9789387383630 |
Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 552 |
Published On | Jun 2018 |
Year | 2022 |
Edition | 12 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Essay | கட்டுரை |