Menu
Your Cart

காற்றாய் கடந்தாய்

காற்றாய் கடந்தாய்
-5 %
காற்றாய் கடந்தாய்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த முயல்கின்றன சித்துராஜின் கவிதைகள். தன்னுடைய முதல் தொகுப்பான இந்தப் புத்தகத்தில் சித்துராஜ் முதிர்ச்சியானதொரு மொழி நடையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதே திசையில் அவரது கவிதைப் பயணம் தொடர்கிறபட்சத்தில், உயர்ந்த இலக்குகளை அடையும் என்பதை இந்தக் கவிதைகள் உணர்த்துகின்றன. அதற்கான திறனும், உத்வேகமும், விளிம்பில் பட்டுத் தெறிப்பது போன்ற மனக்கீற்றுகளும் சித்துராஜிடம் பிரகாசமாகக் காணப்படுகின்றன. - பொன். வாசுதேவன்
Book Details
Book Title காற்றாய் கடந்தாய் (Kaatraai Kadanthaai)
Author சித்துராஜ் பொன்ராஜ் (Siththuraaj Ponraaj)
ISBN 9789384921088
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 80
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித உடல் என்பது அரசியல் களம் மட்டுமல்லாமல் அது மனித உடல் ரீதியான உறவுகளின் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ்இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் ..
₹181 ₹190
நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியா..
₹214 ₹225
கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்ட..
₹114 ₹120
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை..
₹171 ₹180