-5 %
மாறிலிகள்
சித்துராஜ் பொன்ராஜ் (ஆசிரியர்)
₹171
₹180
- Year: 2015
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை கடந்து எழும் எழுச்சி கொண்ட நடை என்பது மிக அசலானதாகவும் தன்னிச்சையானதாகவும் இருந்தாக வேண்டும். இல்லையேல் அது செயற்கையான மொழிச்சிடுக்காகவே மாறும். மாறிலிகள் தொகுப்பின் அநேகமாக எல்லாக் கதைகளையுமே குறிப்பிடத்தகுந்த இலக்கிய முயற்சிகள் என்று சொல்லலாம். பெரும்பாலும் எந்தக்கதையிலும் முந்தைய எழுத்தாளர்களின் எதிர்மறைப்பாதிப்பு ஏதுமில்லை. கதைகளை முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுடன் நான் ஒப்பிட்டுநோக்குவது வழக்கம். அது அக்கதைகளை இயல்புசார்ந்து வகைமைப்படுத்துவதற்கு மட்டுமே. சித்துராஜ் நடை மற்றும் கதையமைப்பில் அசோகமித்திரனின் சாயல் கொண்டவர் என்றும் மனநிலையில் அ.முத்துலிங்கம் போன்றவர் என்றும் சொல்லலாம். சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் ‘அக்கரைச்சீமையிலே’, அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ வண்ணதாசனின் ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள். - எழுத்தாளர் ஜெயமோகன்மேலும்
Book Details | |
Book Title | மாறிலிகள் (Maariligal) |
Author | சித்துராஜ் பொன்ராஜ் (Siththuraaj Ponraaj) |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 144 |
Year | 2015 |
Category | Short Stories | சிறுகதைகள் |