-5 %
மெர்சோ: மறுவிசாரணை
₹185
₹195
- Year: 2018
- ISBN: 9789382394327
- Language: தமிழ்
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும் ஒரு சுவாரஸ்யமான நாவலை அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் 2013இல் (ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டு) வெளியிட்டு, பின்னர் 2014இல் பிரான்ஸிலும் வெளியிட்டார். பிரெஞ்சு இலக்கிய உலகில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ‘இன்று அம்மா இன்னும் உயிரோடிருக்கிறாள்’ என்று ‘அந்நியனு’க்கு எதிரொலியாக அமையும் வரிகளுடன் தொடங்கும் இவருடைய எழுத்தின் துணிச்சலும் சவாலும், இவரிடம் காணப்படும் பிரெஞ்சு மொழி ஆளுமையும் பிரான்சில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத் தந்திருப்பதுடன், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் காரணமாக இருந்திருக்கின்றன. ‘அந்நிய’னின் தொடர்ச்சியான காமெல் தாவுதின் இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல்: பிரெஞ்சு மூலத்தில், ‘அந்நியன்’ புத்தகத்தில் உள்ள மொத்த எழுத்துகள் (நிறுத்தற்குறிகளையும் சேர்த்து) எவ்வளவோ, துல்லியமாக அதே அளவு இந்தப் புத்தகத்தில் இருக்கும்படி காமெல் தாவுத் கவனமாகப் பார்த்து எழுதியிருக்கிறார். அந்நியன் வாசித்தவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்.
Book Details | |
Book Title | மெர்சோ: மறுவிசாரணை (Merso Maruvisaaranai) |
Author | காமெல் தாவூத் (Kaamel Thaavoodh) |
Translator | வெ. ஸ்ரீராம் (V. Sriram) |
ISBN | 9789382394327 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 0 |
Year | 2018 |