Menu
Your Cart

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
-5 %
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
டி.தருமராஜ் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது இளையராஜா புத்தகமும்தான். இளையராஜாவின் பாடல்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன. திரைப்படங்களிலிருந்து வெளியேறி தனித்த உயிர்களாக இப்பாடல்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் மாயம் எப்படி நிகழ்ந்தது? நம் கொண்டாட்டங்களிலிருந்து, சோகங்களிலிருந்து, காதலிலிருந்து, நினைவுகளிலிருந்து, ஞாபகங்களிலிருந்து இளையராஜா பாடல்களை விலக்க முடியாமல் ஏன் வித்துக்கொண்டிருக்கிறோம் நாம்? இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா, சாதி, அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து, நம் உணர்வு, ரசனை, பண்பாடு, மரபு, நிலம், மொழி, தத்துவம், வரலாறு என்று கிளைகளைப் பரப்பி, விரிந்துகொண்டே செல்கிறது. கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன. இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.
Book Details
Book Title இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? (Ilayaraja Yaen Mudhalvar Vetpalar Illai?)
Author டி.தருமராஜ் (Ti.Tharumaraaj)
ISBN 9788194932161
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 176
Year 2020
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற க..
₹361 ₹380
கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப்..
₹86 ₹90
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு ..
₹238 ₹250