- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பனுவல் பரிந்துரைகள்
தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை :
பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு இந்நூல். “நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி. இதனை ஆய்வு செய்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அப்படியானால் காவேரிப் படுகையில் பரவலாக நிலவி வந்த நிலப்பிரபுத்துவ உறவு முறைகள் அப்படியே இப்போதும் தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டுமே, இதனைத் தேடி அலைந்த எனக்குக் கிடைத்த விடை ‘முடிந்து போன ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள்’ என்பதே. ஆனால் மிகுந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட காவேரிப் படுகைப் பகுதியிலிருந்து வந்த ஒரு ஆய்வுகூட இதனை ஆவணப்படுத்தவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப எடுக்கப்பட்ட சிறிய முயற்சியே இந்நூல். நிலப்பிரபுத்துவம் இப்பகுதியில் எப்படி வீழ்ந்தது என்பதை இதில் ஆவணப்படுத்தியுள்ளேன். தமிழகத்தின் எழுதப்படாத வரலாறுகள் ஏராளமாக உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன். அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்தால் தமிழகத்தின் நல்லூழ் ஆகும்.”
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான். இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் இப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | ஜெ.ஜெயரஞ்சன் புத்தகங்கள் (Combo) (JEyaranjan) |
Author | ஜெ.ஜெயரஞ்சன் (Je.Jeyaranjan) |
Publisher | பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions) |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், திராவிட அரசியல், Economics | பொருளாதாரம், Combo Offer |