- Edition: 4
- Year: 2012
- ISBN: 817201743X
- Page: 115
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
மறைமலை அடிகள்
மறைமலை அடிகள் (1876-1950) (இயற்பெயர் சுவாமி வேதாசலம்) தமிழ்ப் பெரும்புலவர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லுநர். சைவசமயத்தில் மிகுந்த பற்று உடையவர். நல்லாசிரியராகவும், ஆராய்ச்சியாளரெனவும் புகழ் பெற்றவர். தனித்தமிழ் இயக்கம் கண்டது இவரது தலையாய தொண்டாகும். பழமையிலும் புதுமையிலும் ஏற்றம் பெற்றவர். சீர்திருத்தச் செம்மல். மூடப் பழக்கவழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையும் ஒதுக்கி அறிவியல் நெறியில் அறநெறி மேற்கொண்டவர். இவரது நினைவாக மறைமலை அடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் முதலியவை விளங்குகின்றன.
இந்நூலாசிரியர் இளங்குமரன் பல்வேறு நிலைகளில் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் 42 ஆண்டுகள் பணிசெய்தவர். இலக்கியம், இலக்கணம், வரலாறு, ஆராய்ச்சி என்னும் வகைகளில் 200க்கு மேல் நூல்கள் இயற்றியவர். பாவாணர் நூலகம், திருவள்ளுவர் தவச்சாலை என்பனவற்றின் நிறுவனர். இச்சிறு நூலில் பிறமொழிவாசகர்களையும் கருத்தில் கொண்டு, மறைமலை அடிகளின் வாழ்க்கை மற்றும் நூல்கள் பற்றிய விவரங்களை எளிமையாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலாசிரியர்.
Book Details | |
Book Title | மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (Maraimalai Adigal) |
Author | இரா.இளங்குமரன் (Iraa.Ilangumaran) |
ISBN | 817201743X |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 115 |
Year | 2012 |
Edition | 4 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Literature | இலக்கியம் |