Menu
Your Cart

விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும்
-5 %
விண்ணும் மண்ணும்
ந.சிதம்பர சுப்பிரமணியன் (ஆசிரியர்), ராணிதிலக் (பதிப்பாசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
க.நா.சு-வை இரண்டு வருடங்களாக மீண்டும் வாசிக்கத் தொடங்கும்போது, இடையில் குறுக்குச்சால் உழுவதுபோல் ந.சிதம்பரசுப்ரமண்யன் படைப்புகளை வாசிக்கத்தொடங்கினேன்.. கும்பகோணம் இளம் வாசகர் ஹரிஷ்தான் ந.சி.சு.வை மீண்டும் வாசிக்க வைத்தவர். அவருடைய நாகமணி நாவல் வாசிக்கக் கொடுத்தார். நாகமணி நாவல் உருவாவதற்குக் காரணமாக அமைந்தவை, தன்னுடைய எழுத்துக் கட்டுரைகளே என்று ந.சி.சு.வும் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்வில் இருக்கவேண்டிய குணங்களை, கலையாகவும் ஆன்மீகமாகவும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அவருடைய கதைகளைப்போல் அவருடைய கட்டுரைகளும் வாசிக்க ஏதுவாக இருக்கின்றன. தன் வாழ்விலிருந்து, பிறத்தியார் அனுபவத்திலிருந்து, ஏற்கெனவே நம்மிடம் புழங்கிக்கொண்டிருக்கும் கதைகளிலிருந்து பேசுகிறார். கட்டுரைகளில் அவர் கேட்கும் கேள்விகள் நமக்கானவை என்பதைப் போல் சொல்லாமல் சொல்லிக் கேட்கிறார்
Book Details
Book Title விண்ணும் மண்ணும் (Vinnum Mannum)
Author ந.சிதம்பர சுப்பிரமணியன் (Na.Sidhampara Suppiramaniyan)
Editor ராணிதிலக் (Raanidhilak)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகாத்மா காந்தியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும்,அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால்,காந்தியோடு அந்தக் காலத்திய இந்தியாவையே நம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வோரு இந்தியனும் அப்போது என்ன நினைத்தான், சுதந்திரப் போராட்டம் எப்படி நடந்தது, சராசரி மனிதனின் வாழ்வை அது எப்படி பா..
₹276 ₹290
பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெ..
₹181 ₹190
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.” சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந..
₹143 ₹150
இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி ..
₹238 ₹250