Menu
Your Cart

உஷா சுப்பிரமணியன் கதைகள்

உஷா சுப்பிரமணியன் கதைகள்
-5 %
உஷா சுப்பிரமணியன் கதைகள்
உஷா சுப்ரமணியன் (ஆசிரியர்)
₹561
₹590
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உஷா பல விஷயங்களில், ஒரு முன்னோடி எழுத்தாளர். தீவிரமான விஷய உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பாசாங்கற்று எழுதுவதில், அவர், அவருக்குப் பின்னால் வந்த பலருக்கும் வழி காட்டியவர். தமிழ் இலக்கியச் சூழலில், உண்மைகளை உரமாகச் சொல்வதே மங்கிக் கொண்டு வரும் நேரம் இது. இதை, உஷாவோடு சக பயணியாக, நடந்து கொண்டிருக்கும் நானாவது சொல்லியாக வேண்டும். அவருடைய பல கதைகள், அவை வெளிவந்த காலத்தில் பலத்த சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் ஆளானதை இன்று பலர் அறிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனக்கென்று ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டே அதில் நடந்தவர் அவர். இன்னொருவர் தடத்தில் அவர் நடந்தவர் இல்லை. எழுதுவதில் அவருக்கு இருந்த ஈடுபாடு, தவிர, தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் எந்த முயற்சியையும் அவர் மேற்கொண்டதும் இல்லை. தமிழ் எழுத்துச் சூழலில், ஒரு அபூர்வமான மனிதர் அவர். உஷா சுப்பிரமணியன் அவர்களின் கடந்த முப்பது ஆண்டுகளின் இலக்கிய விளைச்சலை இத்தொகுப்பு உணர்த்தும். இவைகள் பிறந்து, பிரசுரமான காலத்தில் தோற்றுவித்த அதே உணர்வை, திருப்தியை இன்னும், இப்போது வாசிக்கும் போதும் தருகின்றன என்பதே, கதைகளாக இவை பெற்ற வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு நிற்கின்றன. - பிரபஞ்சன்
Book Details
Book Title உஷா சுப்பிரமணியன் கதைகள் (Usha Subramanian Kathaigal)
Author உஷா சுப்ரமணியன் (Ushaa Supramaniyan)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Feb 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha