Menu
Your Cart

கரன்சி காலனி

கரன்சி காலனி
-4 %
கரன்சி காலனி
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பிரிட்டிஷார் காலத்தில் கொல்கத்தாவின் 'தி கிராண்ட் ஹோட்டல்' ஏகப்பிரபலம். 500 அறைகள் கொண்ட அந்த ஹோட்டலின் வெற்றி மற்ற நட்சத்திர விடுதியாளர்களை பொறாமைப் பட வைத்தது. 1933ஆம் ஆண்டு பரவிய காலரா நோய் காரணமாக கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கோர்  இறந்து போனார்கள். அவர்களில் தி கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களும் அடக்கம். சம்பவம் நடந்த அடுத்த நொடியிலிருந்தே சரிவுகள் தொடங்கின. காலராவை காரணம் காட்டியே அந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் விலகி ஓடினர். ஒரு கட்டத்தில் ஹோட்டலையே மூட வேண்டிய சூழல். நொடித்து போன அந்த ஹோட்டலை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார் மோகன் சிங். நன்றாகப் புதுப்பித்து நடத்த ஆரம்பித்தார். சிறுக சிறுக வாடிக்கையாளர்கள் வந்தனர். பின்னர், கடந்த கால அச்சம்,அவப் பெயர், பயம் எல்லாம் முற்றிலுமாக மறைந்தன. லாபம் கிடைக்கத் தொடங்கியது. ஹோட்டல் தொழிலை இந்தியா முழுக்க கொண்டு சென்றார். பிறகு, சிங்கபூர், சவுதி அரேபியா என்று பழ நாடுகளுக்கு விரிவு படுத்தினார். சாதாரண மோகன்சிங் ஹோட்டல்களின் மகாராஜா எம்.எஸ்.ஓபிராய் ஆகப் பிரபலமானார். இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி நம் வாழ்க்கை பாதையில் குறுக்கிடும்.ஆனால் அதை நாம் அடையாளம் காண்பதில்லை. சமயங்களில், அந்த வாய்ப்புகளை அலட்சியமாகக் கடந்து விடுகிறோம். ஆனால், நீங்கள் நல்ல தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்றால் மனக்கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும், வருகின்ற நல வாய்ப்புகளை அடையாளம் காணப் பழக வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ந. இளங்கோவன். இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மனிதரும் உங்களுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், வெற்றிப் பாதையை நோக்கி உங்களை உந்தித் தள்ளுவார்கள். இது உறுதி!
Book Details
Book Title கரன்சி காலனி (Currency Colony)
Author அந்திமழை ந.இளங்கோவன் (Andhimazhai Na.Ilangovan)
ISBN 9789383067541
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 88
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha