-5 %
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே
நா.முத்துநிலவன் (ஆசிரியர்)
₹147
₹155
- Year: 2014
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் அறியப்பட்ட கவிஞர் நா. முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது. நேற்றைய - இன்றைய கல்வி நிலை, கல்வி முறைகள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், அவற்றினால் நிகழ்ந்துள்ள சமூகத் தாக்கங்கள் என நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுயசிந்தனைகளோடு நம்மிடம் கலந்துரையாடுகின்றன. சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக் கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம் என ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும் தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்புகின்றன. கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய மாற்றுக்கல்விக்கான சிந்தனை விதைப்பே இந்நூல்.
Book Details | |
Book Title | முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே (Muthal Mathippen Edukka Vendaam Magale) |
Author | நா.முத்துநிலவன் (Naa.Muththunilavan) |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 160 |
Year | 2014 |