Menu
Your Cart

பானை செய்வோம் பயிர் செய்வோம்

பானை செய்வோம் பயிர் செய்வோம்
-100 % Out Of Stock
பானை செய்வோம் பயிர் செய்வோம்
காஞ்சா அய்லய்யா (ஆசிரியர்), அருணா ரத்னம் (தமிழில்)
₹0
  • ISBN: 9788181466402
  • Page: 148
  • Language: தமிழ்
  • Publisher: Tulika
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காஞ்சா அய்லய்யாவின் ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் ‘பானை செய்வோம், பயிர் செய்வோம்’ (நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு) அருணா ரத்னத்தால் தமிழாக்கப்பட்டுள்ளது. துர்காபாய் வ்யாமின் கோட்டோவியங்கள் இந்நூலை மெருகூட்டுகின்றன. இந்நூலைப் பற்றி காஞ்சா அய்லய்யா சொல்வதைக் கேட்போம். “கல்வித்துறையில் பாடத்திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேன்டும். அதன் பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களைச் சேர்க்கமுடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும். A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்கவேண்டும்”.  பழங்குடியினர், மேய்ப்பர்கள், தோல்பொருள் கலைஞர்கள், விவசாயிகள், மண்பொருள் வினைஞர் (குயவர்), நெசவாளர்கள், சலவையாளர்கள், நாவிதர்கள் ஆகிய உடலுழைப்புத் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களது உழைப்பு, மரபார்ந்த அறிவு, தொழில்நுட்பத் திறன், அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை விளக்கமாக எழுதிச் செல்கிறார். இறுதி மூன்று கட்டுரைகள் உடலுழைப்பைப் பற்றிப் பேசுகின்றன. உற்பத்தித் தொழில்களை அறியாத குருக்கள், போர் வீரர்கள், நிர்வாகிகள், வணிகர்கள் ஆகியோர் கடின உழைப்பை மேற்கொள்ளாது மட்டுமின்றி எந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் உருவாக்காமல் அதன் பலனை மட்டும் அனுபவித்தனர். உழைப்பை இழிவானதாகவும் அதில் ஈடுபடுவோர் முட்டாள்களாகவும் சித்தரிக்கும் போக்கு சமூகக் குற்றமாகும். வாழ்க்கையின் உயிரோட்டமான உழைப்பின் பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். துப்புரவுப் பணியாளர், மருத்துவர் ஆகியோரின் பணிகளும் ஒன்றே. பிணி தீர்க்கும் மருத்துவருக்கும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்கப் படவேண்டும். தோல் தொழிலாளர்களுக்கு பொறியிலாளர்களுக்கு இணையான ஊதியம் இருக்கவேண்டும். உடலுழைப்பையும் அதில் ஈடுபடுவோரையும் சிறுமைப் படுத்தி தீண்டாமைக் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது சரியா என வினா தொடுக்கிறார். உடலுழைப்பில் பாலினப் பாகுபாடு உள்ளது. ஆண்-பெண்ணுக்கான வேலைப் பங்கீடு அறிவீனம். இவர்களில் யாரும் எந்தப் பணியையும் செய்யமுடியும் என்பதே அறிவியல். குழந்தைக்குப் பாலூட்டுதல் தவிர்த்து அனைத்து பணிகளையும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளமுடியும். சிறுவனும் சிறுமியும் சமமாக நடத்தப்படவேண்டும். சம அளவில் உணவு அளிக்கப்படவும் வேண்டும். அனைத்து விதமான பயிற்சிகளும் பெண்களுக்கும் வேண்டும். அப்போதுதான் பெண்களால் திறம்பட செயல்படமுடியும், என்றெல்லாம் வலியுறுத்தும் இந்நூலால் மாணவர்களிடம் ஓர் மாற்றத்தை விதைக்கமுடியும்.
Book Details
Book Title பானை செய்வோம் பயிர் செய்வோம் (Paanai Seivom Payir Seivom)
Author காஞ்சா அய்லய்யா (Kaanjaa Ailaiyaa)
Translator அருணா ரத்னம் (Arunaa Radhnam)
ISBN 9788181466402
Publisher Tulika (Tulika)
Pages 148

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹181 ₹190
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து அவர்களின் வாழ்வனுபவம் அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா. தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித..
₹38 ₹40
பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார். - காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் ச..
₹380