Menu
Your Cart

சாதி எதிர் வர்க்கம்

சாதி எதிர் வர்க்கம்
-4 %
சாதி எதிர் வர்க்கம்
அசோக் (யாதவ்) (ஆசிரியர்), ம.மதிவண்ணன் (தமிழில்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் பார்ப்பன அளவுகோல்களை சுமந்து திரியும் பல்வேறு நபர்களுக்கும், சக்திகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது. அருந்ததியர் இடஒதுக்கீட்டிலும், தலித் இலக்கிய அரசியல் உரையாடல்களிலும் மிக முக்கிய பங்காற்றிய வரும் கவிஞர் மதிவண்ணன் கிரீமிலேயருக்கெதிரான இந்த ஆவணத்தை தமிழாக்கித் தந்ததோடு இப்பிரதிக்கான மிக முக்கிய முன்னுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்திய-தமிழக சமூக நீதி வரலாற்றில் மிக முக்கிய ஆவணமான இப்பிரதி மீது உரையாடலை நிகழ்த்தும் முயற்சியாக தமிழ் மக்களிடம் கருப்புப் பிரதிகள் இந்நூலை முன்வைக்கிறது. திருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பொருந்துரையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைக் தொடர்ந்து வரும் நிலா” இவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்” “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளன. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்னமயாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 1202 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. நாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாரி தவிர்க்க இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. ‘உள்ஒதுக்கீடு: சில பார்வைகள்’ என்கிற நூலின் தொடர்ச்சியில் வெளிவந்துள்ளது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.
Book Details
Book Title சாதி எதிர் வர்க்கம் (Saathi Vs Varkkam)
Author அசோக் (யாதவ்) (Asok (Yaadhav))
Translator ம.மதிவண்ணன் (Ma.Madhivannan)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 80
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...
₹90 ₹95
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை உலைகளில் இருந்து தெறித்து விழும் நெருப்புத்துளிகளாய் பல கவிதைகள் உள்ளன. ஆதிக்க சாதிய உணர்வுக்கு எதிராகவும், மத வழிபாட்டின், பெண்ணிய இழிவுத்தன்மைக்கு எதிராகவும் என கவிதைகள். தேர்வு செய்து கொண்ட களங்கள் எல்லாம் ருத்ரதாண்டவ மேடைகள். கவிதைகளில் வசைசொற்கள் பல அவை பயன்ப..
₹38 ₹40
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
வெளிச்சங்களை புதைத்த குழிகள்பெரியாரை தலித்களின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகால பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை...
₹95 ₹100