Menu
Your Cart

பிசாசு (Screenplay)

பிசாசு (Screenplay)
-5 %
பிசாசு (Screenplay)
இயக்குனர் மிஷ்கின் (ஆசிரியர்), மிஷ்கின் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பிசாசு- திரைக்கதை:

மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ஒரு Mysterious ஆன Thriller கதையில் எப்படி சிறந்த கவிதையைக் கொண்டுவர முடியும்? கண்டிப்பாக முடியுமென்று தன் சக Technician களின் மூலம் நிரூபித்திருக்கிறார். முன்னெப்போதும் கேட்டிராத புத்தம் புதிய இசையை Arrel Corelli தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிராய், சர்வதேச சண்டைப் பயிற்சியாளர் டோனியின் துணைகொண்டு இந்த Magic நிகழ்ந்திருக்கிறது.

தடாலடியாக ஒரு நாவலின் முப்பதாவது பக்கத்திலிருந்து ஆரம்பித்தது போல் தொடங்குகிறது கதை. எந்தவித description ம் இல்லாமல் ஒரு பெண்ணின் ரெட்டை விழிகள் Close-upல் காட்டப்படுகையில் வயலின் இசை தனது சிம்பனியை தொடங்கிவிடுகிறது. மிஷ்கின் Factor படம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதற்கு, அவர் பழைய Technician களைத் தவிர்த்திருப்பது தான் காரணம். Weird ஆன கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கும் தனித்தனியான காட்சிகள் திரைக்கதையோடு பின்னிப் பிணைந்து அழகியலாகவும், இயல்பாகவும் புகுத்தப்பட்டிருக்கிறது. மிஷ்கினிடம் தொடர்ச்சியாக சொல்வதற்கு பல கதைகள் (Tales) இருக்கின்றன. அதற்குக் காரணம் அவர் உலக இலக்கியங்களை தொடர்ச்சியாக படிப்பது. அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக தஸ்தோவெஸ்கியை குறிப்பிடுவது வழக்கம் ஆனால், வலி-துயரம் ஆகிய யதார்த்தவாத கதைகளைத் தாண்டி Fantasy – யையும் Metafiction ஆக திரைக்கதையில் இணைத்திருப்பது புதிய விஷயம்.

கதாநாயகன் பச்சை ஆப்பிள்கள் அடங்கிய ஒரு சிறிய அட்டைப் பெட்டியை ஆட்டோக்காரரிடம் (பச்சை) ”அண்ணா! இது என்ன கலர் என்று தெரிகிறதா?” என்று கலக்கத்துடன் கேட்கும் காட்சி தமிழ் சினிமாவில் புதிய பரிமாணம். இத்தகைய காட்சியை நான் இதற்குமுன் வந்த எந்தத் திரைப்படத்திலும் பார்த்ததில்லை. எங்கும் பச்சைச் செடிகள், பச்சைக் கார், பச்சைப் பிசாசு, சண்டைக்காட்சியில் காட்டப்படும் பச்சைக் கண்ணாடி பாட்டிலின் கூர்முனை, பச்சை சிக்னல் என பச்சை, படம் நெடுக வியாபித்திருக்கிறது. மிஷ்கினுக்கு நிறங்களின் மேலுள்ள காதல் பளிச்சென திரையில் தெரிகிறது.

முழுப்படம் பற்றி விரிவாகச் சொன்னால் சிலர் படம் பார்ப்பதை தள்ளிப்போடும் வாய்ப்பிருப்பதால் கதையை முழுவதுமாகச் சொல்லவிரும்பவில்லை. வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் சுவாரசிய இளைஞன், தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கும் மனைவி, வாடிக்கையாளருக்காக இரக்கப்படும் பிரியாணி கடைக்காரன், அடுத்தவர்களின் ரகசியத்தை செய்தித்தாள்களில் படிக்கத் துடிக்கும் நபர்களைச் சாடுகிற டீக்கடைக்காரன், செல்ல மகளுக்காக எதையும் செய்யத்துணியும் தந்தை, பிச்சைக்காரர்களுக்காக வயலின் இசைக்கும் கதாநாயகன், பேயோட்ட வரும் குள்ளப் பெண்மணி என படம் முழுவதும் உளவியல் ரீதியாக மனித மனங்களை ஆராயத்தலைப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்.

மிஷ்கினின் வாழ்க்கை அனுபவம், வலி, துயரம், மனநிம்மதி, மகிழ்ச்சி, கனவு ஆகியவை இசைக்கோர்வைகளாக உருவாகி, காட்சிகளாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படம் முழுவதும் ஒரு Pleasant ஆன அனுபவம் தரும் வகையில் பிரயாணிக்கிறது. இறுதிக்காட்சியில் மட்டுமே அவிழ்க்கப்படக் காத்திருக்கும் கதையின் முடிச்சுக்கு முன்பாக, என்ன சுவாரசியம் கொடுத்துவிட முடியும் என்று நினைப்பவர்கள் தியேட்டருக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படியொரு Thriller படத்தில் தத்துவார்த்தக் கேள்விகளையும் மனிதநேயப் பண்புகளையும் ஒருசேரப் புகுத்தி ஒரு செழுமையான விவாதத்திற்கு மிஷ்கின் தயாராகிறார். எதிர்காலத்தில் பலவிருதுகளை பெறப்போகும் திரைப்படம் என்றாலும், உள்ளூர் ரசிகர்களையும் தனது மிஷ்கின் Factor ஆல் கவர்ந்திருக்கிறார். இது அவர் தனது கலையின்மேல் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி.

Landscape மிகநேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளிலும் juxtapose ஆக காட்டப்படும் மற்றொரு காட்சி மிக நுட்பமாக சின்னஞ்சிறு கதைகளாக, விநோதமான அழகியல் காட்சிகளாகவும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. Intertextuality ஐ இவர் மிகத்தெளிவாக புரிந்து வைத்திருப்பதால் பல குறும்படங்கள் ஒன்றாக இணைந்து ஓர் ஒற்றைக் கதையாடலாக உருவாகியிருக்கிறது. படத்தின் பிண்ணணியில் காட்டப்படும் Objects ஒவ்வொன்றும் ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்கின்றன. படத்தின் Flow சிறிதும் தடைபடாமல் Editing செய்திருக்கிறார் கோபிநாத். மிஷ்கின் தனது `பிசாசு’ மூலம் ஒரு புதிய அறைகூவலை விடுத்திருக்கிறார். படத்தின் Climax காட்சியை நீங்கள் நேரடியாக கண்டு ரசிப்பதே சரி.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் வேர்களைத்தாண்டி மற்றொரு முனையை நோக்கிப் பயணப்பட்டிருக்கும் அற்புதமான கலைப்படைப்பு. இனியெப்போதும் கடவுள் எதையும் செய்யப் போவதில்லை – மிஷ்கினின் பிசாசுதான்.

இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தின் திரையாக்கத்தைப் பற்றி இந்தியாவிலேயே வந்த மிக அரிதான ஆக்கம். தமிழ் சினிமாவில் இது ஒரு முதன்முதல் நிகழ்வு. திரைப்படத்திலிருது நேரடியாக எடுக்கப்பட்ட எண்ணற்ற நிழற்படங்களாலும் கதைப் பலகையின் கோட்டுச் சித்திரங்களாலும் வரை படங்களாலும் அழகாய் தெளிவாக்கப்பட்ட இப்புத்தகம் ஒரு திரைப்படம்போலவே பார்ப்பதற்கு சுவையானது.
இயக்குநர் மிஷ்கின் தனது படத்தின் திரையாக்கத்தை விரிவாக விவரிப்பதனூடாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் திரைப்பட அனுபவத்தையும் அதன் படைப்புத் தருணங்களின் பின்னால் இயங்கிய உள்ளுணர்வுகளையும் நாம் ஆழமாக புரியும்படியே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Book Details
Book Title பிசாசு (Screenplay) (Pisasu (Screenplay))
Author இயக்குனர் மிஷ்கின் (Iyakkunar Mishkin), மிஷ்கின் (Myskin)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 374
Year 2014
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha