Menu
Your Cart

சுளுந்தீ

சுளுந்தீ
Hot -5 %
சுளுந்தீ
முத்துநாகு (ஆசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

   இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்தியங்களையும், தனிமனித வீரம் நிகழ்த்தும் வரலாற்று மாற்றங்களால் எழும் நாட்டார் கதைகளும், ஜமீனுக்குட்பட்ட அதிகார வரம்புகளை நில வரைவியல் முறையில்  பாலியல் பாசாங்குகள் அற்றுப் பேசும்போது அது ஏற்படுத்தும் மாயஜாலங்களும், சவரக்கத்திக்குள் மறைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இவ்வளவு நெருக்கமாகப் பதிவு செய்த விதத்தில் இந்த நாவல் அதிசயத்தை நிறுத்துகிறது.

    நாவிதன் புரவியின் காலடிச்சத்தம் காதுக்குள் கதம்ப வண்டுச் சத்தமாய் கிறுகிறுக்க வைக்கிறது. கிடா முட்டுச்சத்தம்  நமக்கான பெருந்தண்டனையாய் மாறும் அதே நேரத்தில், நாவிதனின் நடவடிக்கைகள் ஆகம விதிகளுடனும் பிறப்பின் தர்மத்தையும் எரிக்கும் வேள்வியாகிறது. தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஓமலிப்புப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதற்கு எடுத்துக் காட்டு கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் நூல்.

   நமக்குத் தேவையான மருத்துவம், நிலவரைவியல், கலாச்சாரப் படிமங்கள், மனித நோய்க்கூறுகள், சமூகத் தரவுகள் மற்றும் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என அனைத்துக் குறிப்புகளுக்கும் இந்த நாவல் உங்கள் நூலகத்தில் இருந்தால் எடுத்துத் தைரியமாகத் தேடலம்.

Book Details
Book Title சுளுந்தீ (Sulunthi)
Author முத்துநாகு
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 472
Published On May 2019
Year 2019
Edition 01
Format Hard Bound
Category Novel | நாவல், தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது. மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர..
₹238 ₹250