-3 %
Out Of Stock
இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்
₹29
₹30
- Year: 2018
- Format: Paperback
- Language: தமிழ்
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் ஆய்வுகளுக்கான அவசியங்கள் இருந்தபோதும், அதன் விளைவுகள் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக ஆய்வகங்களில் நியூட்ரினோக்களை உருவாக்கும்போது அங்கு உருவாகும் கதிர்வீச்சுகள், அருகிலிருக்கும் பகுதிகளில் எத்தகைய சூழல் கேடுகளை உருவாக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. மாநில அரசுகளின் அனுமதி பெறுவதில்கூட வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை.
தங்களது அனுமதி பெறாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கேரள அரசு கூறியிருப்பதும் இந்தக் காரணத்தால்தான். இதுகுறித்து அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய கட்டுரைகள், அதற்கு இந்திய நியூட்ரினோ ஆய்வகம் தெரிவித்த மறுப்பு, வி.டி.பத்மநாபனின் விளக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
Book Details | |
Book Title | இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும் (India Neutrino Aaivagam Arivippugalum Unmaigalum) |
Author | வி.டி.பத்மநாபன் |
Translator | அருண் நெடுஞ்செழியன் (Arun Nedunjezhiyan), மு.வசந்த குமார் (M. Vasantha Kumar) |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 0 |
Year | 2018 |
Format | Paperback |
Tags:
அருண் நெடுஞ்செழியன்
, கட்டுரை
, மு. வசந்த குமார்
, சூழலியல்
, பூவுலகின் நண்பர்கள்
, வி. டி. பத்மநாபன்