-5 %
ஒன்று
₹95
₹100
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788184764659
- Page: 135
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம்.
Book Details | |
Book Title | ஒன்று (Ondru) |
Author | ரா கண்ணன், ராஜு முருகன் |
ISBN | 9788184764659 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Pages | 135 |
Published On | Nov 2012 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |