
-5 %
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
டி கே இரவீந்திரன் (ஆசிரியர்)
₹223
₹235
- Edition: 2
- Year: 2015
- ISBN: 9788184766851
- Page: 382
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றினை, கலாசாரத்தை, மதம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்கள் என சகலத்தையும் மாற்றியமைத்தவர்கள் மொகலாயர்கள். மத்திய ஆசியப் பகுதியில் இருந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மொகலாயர்கள் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கம் வரும் வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சியவர்கள். மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டு, அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன. பாபர் முதல் ஒளரங்கசீப் வரை மொகலாயர்கள் சந்தித்த துரோகங்கள், படையெடுப்புகள், பதவிக்காக தந்தை மகனுக்கு இடையே, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், அவர்களின் ஆட்சி முறைகள், செயல்பாடுகள், ஒளரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் எப்படி சரிந்தது போன்றவற்றை, மொகலாய வரலாற்றில் நாம் அறியாத பல தகவல்களைத் தரும் நூல் இது. இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியை தன் ஆட்சிப் பகுதியாக வைத்திருந்த ஒளரங்கசீப், குல்லா தைப்பதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தைத்த குல்லாக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி, அதில் வந்த வருமானத்திலேயே தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது போன்ற அரிய செய்திகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நானூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று மொகலாயர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வாழ்வியலையும் நமக்குக் காட்டும் இந்த நூல், வாசிப்பவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் வாய்த்த வரப்பிரசாதம்.
Book Details | |
Book Title | மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் (Mohalayargalin ezhuchiyum veezhchiyum) |
Author | டி கே இரவீந்திரன் |
ISBN | 9788184766851 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Pages | 382 |
Published On | Jul 2015 |
Year | 2015 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, உலக வரலாறு |