Menu
Your Cart

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்
-5 % Out Of Stock
குற்றம் புரிந்தவர்
சுபா (ஆசிரியர்)
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். தமிழகத்தில்... இந்திய அளவில்... உலக அளவில் என விரியும் இந்த உண்மைக் கதைகளில் மர்லின் மன்றோ, கென்னடி போன்ற உலகப் புகழ்பெற்ற பிரமுகர்கள் தொடங்கி, சைக்கோ கில்லர்கள் வரை அலசப்பட்டிருக்கிறார்கள். தலைப்பு சொல்கிறபடி, இதில் அலசப்பட்டக் குற்றங்கள் மிகுந்த திட்டமிடப்பட்டவை. இதில் வரும் குற்றவாளிகள் எல்லோரும் குற்றம் ‘புரிந்தவர்கள்’. அதாவது, புரிந்து செய்யப்பட்ட குற்றங்கள், கொலைகள். கண்டுபிடிக்க முனைந்தவர்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியவை. சில கண்டுபிடிக்க முடியாமலேயே போனவை. சட்டத்தின் முன் பெரிய கேள்விக் குறியை போட்டுவிட்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளிகளும் உண்டு. காரணம் இல்லாமல் தண்டனை அனுபவித்த நிரபராதிகளும் உண்டு. கண்டுபிடிப்பதில் உள்ள திருப்பங்களைப் போலவே குற்றம் செய்வதிலும் இத்தனை தினுசுகளா என ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. குற்றங்கள் சில சமயம் ஒரு புதிர் போட்டி போல அவிழ்க்கப்படுகின்றன. சுபாவின் சுவாரஸ்யமான நடை அந்த விறுவிறுப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. முத்தாய்ப்பாக மகாத்மா காந்தியின் படுகொலை ஆராயப்பட்டிருக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் அந்தப் படுகொலையின் பின்னணி நமக்குச் சொல்வது என்ன? அந்தப் பின்னணிக்கு மட்டும் அல்லாமல் உலகின் அத்தனை குற்றங்களுக்குமான காரணத்தை அந்தக் கடைசி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். ‘அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்’ என அழுத்தமாகச் சொல்லி முடித்திருக்கிறார் சுபா. குற்றம் புரியா சமூகம் அமையட்டும்!
Book Details
Book Title குற்றம் புரிந்தவர் (Kutram purinthavar)
Author சுபா
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹114 ₹120

₹76 ₹80

₹95 ₹100