Menu
Your Cart

யாத்ரீகனின் பாதை

யாத்ரீகனின் பாதை
-5 %
யாத்ரீகனின் பாதை
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பயணம் என்பது ஒரு உயிருக்குள் என்ன நிகழ்த்துகிறது? பிரபஞ்ச இயக்கம் ஒவ்வொன்றிலும் ஒரு பயணத்தவிப்பு உள்ளடங்கியிருக்கிறது. இயற்கை என்பது விளைவுகளால் ஆனது. விளைவு என்பது ஒருவகையில் செயலின் பயணம் தான். ஒரு பயணம் என்ன செய்யும்? மண் திறந்த ஒரு சிறுவிதையை வான்நோக்கி எழுகிற பெருவிருட்சமாக வளர்த்துகிறது. முட்டையைக் கிழித்து நிலம் தவழும் ஒரு ஆமைக்குஞ்சை ஆழ்கடலை அடைய வைத்து ஆயுள் அளிக்கிறது. காற்றில் சிறகசைக்கும் சிறுபறவையை கண்டங்கள் தாண்டி கொண்டுசெல்கிறது. மேகத்துள் திரளும் நீர்த்திவலையை பூமி மீது மகிழமகிழ விழ வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பயணம் நம்முடைய சிறுசிறு நம்பிக்கைகளை உடைக்கிறது. அதன்மூலம் நம்மை நிலைகுலைக்கிறது. ஆனால் கொஞ்ச காலத்திற்குப்பின், உடைந்தழித்த நம்பிக்கைகள் நமக்குள் பெரும் நம்பிக்கைகளாக உருப்பெருகிறது. வாழ்வின் மீது அளவிலாத விருப்பத்தை வழங்குகிறது. இதற்கு முன் நம்பியதைவிட இன்னும் வலுவாக நம் மனதை நம்பச்செய்வதே ஒரு பயணம் நமக்குள் நிகழ்த்தும் அருஞ்செயல். இப்புத்தகம், கைகளில் புகைப்படக்கருவியை ஏந்திப் பயணித்த ஒருவனின் மறக்கவியலாத பயணநினைவுகள் மற்றும் அதன் காட்சிப்பதிவுகளின் தொகுப்பு. இலக்கற்ற ஒரு பயணத்துக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்த ஒருவனின் ஒளிதேடும் தவிப்பு. இப்புத்தகம் தன்னறம் நூல்வெளி வாயிலாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.
Book Details
Book Title யாத்ரீகனின் பாதை (Yathreeganin pathai)
Author வினோத் பாலுச்சாமி
Publisher தன்னறம் (Thannaram)
Year 2020
Edition 1
Format Hard Bound
Category பயணக் கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author